பிரான்ஸ், நார்வே வரிசையில்... ட்ரம்பின் அழைப்பை நிராகரித்த நியூசிலாந்து
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சமாதான வாரியத்தில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை நியூசிலாந்து நிராகரித்துள்ளது.
கூடுதல் மதிப்பை
ட்ரம்பின் சமாதான வாரியத்தில், தற்போதைய வடிவத்தில் சேரப் போவதில்லை, ஆனால் நிலைமைகளைத் தொடர்ந்து கண்காணிக்கும் என்றும் நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக அந்தப் பிராந்தியத்தைச் சேர்ந்த பல நாடுகள், காஸா விவகாரத்தில் அந்த வாரியத்தின் பங்களிப்பிற்கு உதவ முன்வந்துள்ளன, மேலும் நியூசிலாந்து இதில் குறிப்பிடத்தக்க கூடுதல் மதிப்பைச் சேர்த்துவிடாது என்றும் அமைச்சர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், ட்ரம்பின் அழைப்பிற்கு பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், பிரான்ஸ், நார்வே மற்றும் குரோஷியா உள்ளிட்ட குறிப்பிட்ட நாடுகளே நிராகரித்துள்ளன.
நிராகரிக்கவில்லை
இந்த நிலையில், பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் மற்றும் துணைப் பிரதமர் டேவிட் சீமோர் ஆகியோருடன் இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் நிடூசிலாந்து அந்த வாரியத்தின் யோசனையை முழுமையாக நிராகரிக்கவில்லை, மாறாக ஐக்கிய நாடுகள் சபையின் மீதான தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது என்றே வின்ஸ்டன் பீட்டர்ஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு முன்னணி நிறுவனராகவும் நீண்டகால ஆதரவாளராகவும் இருப்பதால், இந்த வாரியத்தின் பணிகள் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்குப் பூர்த்தி செய்வதாகவும் அதற்கு இணக்கமானதாகவும் இருப்பது முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |