நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இளம் பெண் எம்.பி உணர்ச்சி பொங்கிய உரை: வீடியோ
நியூசிலாந்து மெளரி பழங்குடி பெண் எம்.பி மைபி கிளார்க் பாரம்பரிய வெற்றி முழக்கத்தை நாடாளுமன்றத்தில் முழங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நியூசிலாந்து பெண் எம்.பி
நியூசிலாந்தின் மெளரி பழங்குடி பெண் எம்.பியான மைபி கிளார்க் தங்களுடைய வெற்றி முழக்கத்தை முழக்கமிட்டு விட்டு உரையாற்றியது உலகம் முழுவதும் வைரலாகி வருகிறது.
170 ஆண்டுகால நாடாளுமன்ற வரலாற்றில் 21 வயது இளம் பெண் எம்.பியாக மையி கிளார்க் கடந்த அக்டோபர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
New zealand mp proudly displaying original Maori traditional sounds in parliament.They were also ruled by British like us but they dont forget their roots.
— Yana Mir (@MirYanaSY) January 4, 2024
Hamare yaha sab Angrez banney chaley hain.
If any1 dares to chant Hanuman Chalisa in parliament they r using"religion card" pic.twitter.com/OCqMdwhijx
ஹன்ட்லி பகுதியை சேர்ந்த மையி கிளார்க் நியூசிலாந்து நாட்டின் மெளரி பழங்குடி இனத்தை சேர்ந்தவர்.
லண்டனின் பிரம்மாண்ட OWO கட்டிடம்: பளபளக்கும் ஹோட்டலாக மாற்றிய இந்திய குடும்பம்: மிரளவைக்கும் சொத்து மதிப்பு
நியூசிலாந்தில் மெளரி பழங்குடியினர் தங்களது போர், வெற்றி, ஒற்றுமை மற்றும் இன குழுவின் பெருமை ஆகியவற்றை தங்களது சொல்லால் பயன்படுத்தும் முறையை கொண்டுள்ளனர்.
அதன் படி, அந்த பழங்குடியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 21 வயது இளம் பெண் எம்.பியான மைபி கிளார்க் தனது வெற்றி முழக்கத்தை நாடாளுமன்றத்தில் பேசி அதிர வைத்துள்ளார்.
இந்த முழக்கத்தை கேட்ட சக எம்.பிக்கள் அதை மகிழ்ச்சியுடனும், ஆச்சரியத்துடனும் கேட்டுக் கொண்டு இருந்தனர்.
மைபி கிளார்க் உணர்ச்சிவசமாக பேசிய அந்த வீடியோ தற்போது உலகம் முழுவதும் பெரிய அளவில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
New Zealand mp, Maori, Maori traditional sounds, New Zealand parliament, Hana-Rawhiti Maipi-Clarke