சோதனையில் கண்டறிய முடியாத புதிய வகை கொரோனா உருவானது! எந்த நாட்டில்? ஆய்வாளர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்
ஐரோப்பிய நாடான பின்லாந்தில் கண்டறிய கடினமான புதிய வகை கொரோனா வைரஸ் கண்பிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர்.
Fin-796H என பெயரிடப்பட்டுள்ள புதிய வகை கொரோனா தெற்கு பின்லாந்தில் கண்டறியப்பட்டதாக வீடா ஆய்வகங்கள் மற்றும் Helsinki பல்கலைக்கழகத்தின் Biotechnology நிறுவனம் இணைந்து நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுகாதார அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து பி.சி.ஆர் சோதனைகளாலும் புதிய மாறுபாட்டை கண்டறிய முடியாது என பின்லாந்து ஆய்வகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த புதிய வகை கொரோனா இதற்கு முன்னர் எங்கும் கண்டறியப்படாது வைரஸின் மாறுபாடு என தெரிவித்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பு நோயின் பரவலை தீர்மானிப்பதில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்த மாறுபாடு எங்கு தோன்றியது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்களிடம் இன்னும் தகவல் ஏதும் இல்லை, ஆனால் பின்லாந்தில் ஒட்டுமொத்த கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை மற்ற நாடுகளை விட கணிசமாகக் குறைவாக இருப்பதால் இது அங்கு உருவாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள் புதிய மாறுபட்ட கொரோனாவுக்கு எதிராக எடுபடுமா என்பதும் தெளிவாக தெரியவில்லை.