புதுமணத் தம்பதி இரயிலில் இருந்து விழுந்து மரணம்! வெளியான வீடியோவால் அதிர்ச்சி
இந்திய மாநிலம் ஆந்திராவில் புதுமணத் தம்பதி, இரயிலில் இருந்து விழுந்து இறந்த சம்பவத்தில் வீடியோ ஒன்று வெளியாகி சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
புதுமணத் தம்பதி
ஆந்திர மாநிலத்தின் பார்வதிபுரம் மன்யம் மாவட்டம் ரவுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கோரடா சிம்மாசலம் (25) மற்றும் பவானி (19). இவர்களுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்துள்ளது.
రైలు నుంచి పడి నవ దంపతులు మృతిచెందిన ఘటనలో ట్విస్ట్
— Telugu Scribe (@TeluguScribe) December 20, 2025
మృతికి ముందు రైలులో గొడవ పడ్డ దంపతులు
యాదాద్రి భువనగిరి జిల్లా వంగపల్లి - ఆలేరు రైలుమార్గంలో కింద పడి మృతి చెందిన దంపతులు
అయితే, ఈ ఘటనకు ముందు రైలులో గొడవ పడ్డ దంపతులు
దీంతో భర్తతో గొడవ పడి క్షణికావేశంలో ముందుగా రన్నింగ్… https://t.co/2LvgY9SzG6 pic.twitter.com/fp3st5HCZp
சிம்மாச்சலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு இரசாயன நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர் தனது மனைவியுடன் ஜகத்கிரிகுட்டாவின் காந்திநகர் பகுதியில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், இருவரும் செகந்திராபாத்தில் இருந்து விஜயவாடா செல்லும் இரயிலில் ஏறியுள்ளனர். வாங்கப்பள்ளி இரயில் நிலையம் அருகே ரயிலின் கதவில் இருந்து தம்பதியர் தவறி விழுந்தனர்.
அவர்களின் உடல்கள் அடுத்த நாள் காலை இரயில்வே ஊழியர்களால் கண்டெடுக்கப்பட்டன. அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 
சந்தேகத்தை கிளப்பிய வீடியோ
ஆரம்பத்தில் இது விபத்தாக இருக்கலாம் என்று கருதப்பட்டது. அந்த கோணத்தில் இதுதொடர்பாக பொலிஸார் விசாரணையை தொடங்கினர்.
ஆனால், தற்போது தம்பதி குறித்து வெளியான வீடியோ ஒன்று சந்தேகத்தை கிளப்பியுள்ளது. சிம்மாசலமும், பவானியும் ரயிலில் சண்டையிடுவதை மற்றொரு பயணி வீடியோ எடுத்துள்ளார்.
இதனால், அவர்கள் இருவரும் ரயிலின் வாயிலில் நின்று வாக்குவாதம் செய்தபோது கீழே விழுந்தார்களா? அல்லது சண்டையால் ஒருவர் பின் ஒருவராக கீழே விழுந்து தற்கொலையா? என பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |