திருமண ஒரு மாதத்தில் புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்! விருந்துக்கு சென்ற இடத்தில் பரிதாபம்
விருந்துக்கு சென்ற இடத்தில் புதுமண தம்பதி உயிரிழந்த சோகம்
புதுமாப்பிள்ளையை காப்பாற்ற சென்ற அவரது மனைவி உட்பட மூவர் பலியான பரிதாபம்
தமிழக மாவட்டம் தேனியில் ஆற்றில் குளிக்க சென்ற புதுமண தம்பதி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி அருகே பொம்மை கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் ராஜா(30). இவருக்கும் காவியா(20) என்ற பெண்ணிற்கும் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.
அதனைத் தொடர்ந்து போடியில் உள்ள உறவினர் வீட்டிற்கு புதுமணத் தம்பதி விருந்துக்காக சென்றுள்ளது. அங்குள்ள பெரியாற்று கோம்பை ஆற்றில் குளிக்க ராஜா, காவியா இருவரும் சஞ்சய் என்பவருடன் சென்றுள்ளனர்.
அப்போது குளித்துக் கொண்டிருந்த ராஜா நீர் வரத்து திடீரென அதிகரித்ததால் சுழலில் சிக்கினார். அவரது அலறல் சத்தம் கேட்ட சஞ்சய், காவியா இருவரும் ராஜாவை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவர்களும் சுழலில் சிக்கியதால் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மூவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில், நீரில் மூழ்கி புதுமணத்தம்பதி மற்றும் சஞ்சய் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அவர்களின் உடல்கள் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணமான ஒரு மாதத்தில் விருந்துக்கு சென்ற புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.