என் மகனிடம் ஏற்பட்ட மாற்றம்! அவனை மூளைசலவை செய்தனர்... நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையரின் தாயார் வெளியிட்ட முக்கிய தகவல்
நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையரை அவரின் அண்டை வீட்டார் மூளை சலவை செய்திருந்தனர் என்ற அதிர்ச்சி தகவலை அவரின் தாயார் வெளியிட்டுள்ளார்.
ஆக்லாந்தில் உள்ள கவுண்ட்டவுன் சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையர் ஒருவர் நடத்திய கத்தி குத்தி தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். இதன்பின்னர் தாக்குதல்தாரியை பொலிசார் அதே இடத்தில் சுட்டு கொன்றனர்.
அவரின் பெயர் Ahamed Aathill Mohammad Samsudeen (32) என்பது தெரியவந்துள்ளதோடு அவரின் புகைப்படமும் வெளியிடப்பட்டது. இந்த நிலையில் Samsudeen குறித்த சில முக்கிய தகவல்களை அவரின் தாயார் Ismail Fareeda வெளியிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள ஒரு தொலைக்காட்சி சேனலிடம் பேசிய அவர் கூறுகையில், இலங்கையில் இருந்து வெளியேறி நியூசிலாந்தில் 2011 இல் குடியேறிய பிறகு என் மகனிடம் மாற்றம் ஏற்பட்டது.
கடந்த 2016ல் கீழே விழுந்ததில் Samsudeenக்கு காயம் ஏற்பட்டது. அப்போது சிரியா மற்றும் ஈராக்கை சேர்ந்த Samsudeenனின் அண்டை வீட்டார் அவனை மூளை சலவை செய்தனர்.
இதன்பின்னர் தான் தீவிரமான கருத்துக்களை சமூகவலைதளத்தில் அவன் பதிவிட தொடங்கினான். இதையடுத்து Samsudeenன் செயல்பாடுகளை என்னுடைய மற்ற இரண்டு மகன்களும் கண்டித்தனர் என கூறியுள்ளார்.
இதனிடையில் வழக்கறிஞர் வழியாக Samsudeen சகோதரர் ஆரூஸ் வெளியிட்ட அறிக்கையில், Samsudeenன் கொடூரமான செயலால் மனம் உடைந்துள்ளோம். சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்கு எங்கள் அன்பையும், ஆதரவையும் அனுப்ப விரும்புகிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சூழலில் 2019ல் கொழும்பில் ஈஸ்டர் தினத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் Samsudeenக்கு தொடர்பு இருந்ததா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.