நியூசிலாந்து சூப்பர் மார்க்கெட்டில் இலங்கையர் தாக்குதல் நடத்திய அடுத்த சில மணி நேரத்தில் நடந்த அதிரடி மாற்றம்! வெளியான புகைப்படம்
நியூசிலாந்தில் உள்ள புகழ்பெற்ற கவுண்டவுன் சூப்பர் மார்கெட்டில் நடந்த கத்திகுத்து தாக்குதலையடுத்து தற்காலிகமாக அங்கு கூர்மையான கத்திகள் மற்றும் கத்தரிக்கோல்கள் அகற்றபட்டு அதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆக்லாந்தில் உள்ள கவுண்டவுன் சூப்பர் மார்கெட்டில் வெள்ளிக்கிழமை நுழைந்த 32 வயதான இலங்கையர் அங்கிருந்த ஆறு பேரை கத்தியால் சரமாரியாக குத்தினார். ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளான அவர் பின்னர் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டார்.
இதில், ஆறு பேர் படுகாயம் அடைந்துள்ள நிலையில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் நாட்டின் பல இடங்களில் உள்ள கவுண்டன் சூப்பர் மார்க்கெட்டில் தற்காலிகமாக கூர்மையான கத்திகள் மற்றும் கத்தரிக்கோல்கள் அகற்றபட்டு அதன் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
தீவிரவாத தாக்குதலையடுத்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சூப்பர் மார்க்கெட் மேலாளர் கிரி ஹனிபின் கூறுகையில், தற்காலிகமாக கத்தி மற்றும் கத்திரிக்கோல்கள் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.
அவற்றின் விற்பனையை நிரந்தரமாக நிறுத்தலாமா என்று ஆலோசிக்கப்பட்டு வருகிறது. எங்கள் குழுவினர் அனைவரும் வேலைக்கு வரும்போது பாதுகாப்பாக உணர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம், குறிப்பாக நேற்றைய நிகழ்வுகளை கருத்தில் கொண்டே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எங்கள் முடிவை ஆதரித்த வாடிக்கையாளர்களுக்கும், நேற்றிரவும் இன்றும் எங்களுக்கு கிடைத்த அனைத்து ஆதரவு செய்திகளுக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.