நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் இணையத்தில் தேடி தேடி பார்த்த வீடியோக்கள்! நீதிமன்ற ஆவணம் மூலம் அம்பலமான முக்கிய தகவல்கள்
நியூசிலாந்தில் தாக்குதல் நடத்திய இலங்கையர் தொடர்பான பல புதிய தகவல்கள் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.
ஆக்லாந்தில் உள்ள கவுண்ட்டவுன் சூப்பர் மார்க்கெட்டில் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையர் ஒருவர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் 7 பேர் காயமடைந்தனர். இதன்பின்னர் தாக்குதல்தாரியான Ahamed Aathill Mohammad Samsudeen (32) என்ற இலங்கையரை பொலிசார் சுட்டு கொன்றனர்.
இந்த நிலையில் சம்சுதீன் குறித்து பல்வேறு புதிய தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் நீதிமன்ற ஆவணங்கள் மூலம் சம்சுதீன் எவ்வாறான விடயங்களை இணையத்தில் தேடினார் மற்றும் எந்த வீடியோக்களை பார்த்தார் போன்ற விடயங்கள் குறித்து தெரியவந்துள்ளது.
அதன்படி, நீதிபதி ஜெஃப்ரி வென்னிங்கின் தீர்ப்பு ஆவணங்களில் கூறப்பட்டவைகள்: சம்சுதீன் கடந்த 2018ல் தனது நண்பருடன் ஆக்லாந்தில் உள்ள டார்கெட் ஷுட்டர் கடைக்கு சென்றிருக்கிறார். அங்கு 25 செண்டிமீட்டர் கொண்ட கத்தியை பார்த்து அது குறித்து விசாரித்தார்.
அந்த கத்தியை கொரியரில் தனது வீட்டுக்கு அனுப்ப முடியுமா எனவும் கடை உரிமையாளரிடம் கேட்டார். அந்த சமயத்தில் கத்தியை எடுத்து கொண்டு வீட்டுக்கு செல்லவிரும்பவில்லை எனவும் சம்சுதீன் கூறினார், ஏனெனில் தன்னை மக்கள் ஒரு மோசமான நபர் என அதை வைத்து நினைத்துவிடுவார்கள் என அவர் கருதியிருக்கிறார்.
இதன் பின்னர் அதே கத்தியை அவர் வாங்கிய நிலையில் தான் அவரிடம் இருந்து அதை பொலிசார் பறிமுதல் செய்தனர்.
இதோடு கத்தியை வாங்கிய பின்னர் இணையத்தில் Islamic state dress,Enemies of Allah, Isis allegiance, Heroes of the Islamic state போன்ற விடயங்களை அவர் தேடியிருக்கிறார்.
முக்கியமாக Safety and security guidelines for lone wolf mujahedeen என்ற விடயத்தை தேடியிருக்கிறார். lone wolf என்றால் தனிநபராக வன்முறை செயல்களை திட்டமிட்டு செய்யும் ஒரு செயல் ஆகும்.
இது தவிர சம்சுதீன் பல வீடியோக்களை ஆன்லைனில் பார்த்ததும் தெரியவந்துள்ளது.
அதன்படி, கத்தியை எப்படி சரியாக பயன்படுத்துவது, தலையை கத்தியை கொண்டு எப்படி வெட்டுவது போன்ற வீடியோக்களை பார்த்திருக்கிறார் என நீதிமன்றம் ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது.