தமிழகத்தில் வருகின்ற ஜன.6-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும்- வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 6-ம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறுகையில்...
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நேற்று உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது.
இது அடுத்த 48 மணி நேர்தத்தில் மேற்கு- வடமேற்கு திசைகளில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக தெற்கு அரபிக்கடலில் மத்திய பகுதிகளில் நிலவக்கூடும்.
இதனால் இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
PTI
தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. நீலகிரி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் இரவு நேரங்களில் ஓரிரு இடங்களில் உறை பனிக்கு வாய்ப்புள்ளது.
நாளை முதல் 6-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை 31ºC மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22ºC இருக்கக்கூடும்.
மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40- 45km வேகத்திலும் இடையிடையே 55km வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |