நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் திடீரென என்ஐஏ சோதனை.., பின்னணியில் இருக்கும் லண்டன் பிரமுகர்
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் இன்று காலை முதல் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதற்கு பின்னணியில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
என்ஐஏ சோதனை
தடை செய்யப்பட்ட அமைப்புகள் மற்றும் தீவிரவாத இயக்கங்களுடன் தொடர்பில் இருப்போரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும் பணியை என்ஐஏ செய்து வரும் நிலையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் என்ஐஏ சோதனை மேற்கொள்வது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தென்காசி, திருநெல்வேலி, சிவகங்கை, மதுரை, கோவை உள்ளிட்ட 10 -க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக திருச்சியில் உள்ள நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் சோதனை நடத்தினர். மேலும், நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்திக் ஆஜராக கோரி என்ஐஏ சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
பின்னணியில் உள்ள காரணம்
நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கு இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்களுக்கு தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்த லண்டன் பிரமுகர் ஒருவருடன் தொடர்பு இருப்பதாக கூறுகின்றனர். இவர்கள், பிரத்யேகமான செயலி மூலம் லண்டன் பிரமுகருடன் தொடர்பில் இருந்தாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் தான் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், 2 ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தை சேர்ந்த சஞ்சய் பிரகாஷ் மற்றும் நவீன் சக்கரவர்த்தி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டதும் என்ஐஏ அதிகாரிகள் சோதனைக்கு முக்கிய காரணம் எனவும் சொல்லப்படுகிறது. இவர்கள் யூடியூப் பார்த்து துப்பாக்கிகள் தயாரித்ததாக கைது செய்யப்பட்டனர்.
பின்னர், என்ஐஏ அதிகாரிகள் 2 பேரின் வீடுகளில் சோதனை மேற்கொண்டு விசாரணை நடத்திய போது தான் நாம் தமிழர் கட்சி குறித்த தகவலை என்ஐஏ அறிந்ததாக தகவல் வந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |