நைஜீரியாவில் இராணுவ விமானம் விபத்து - 32 பேருக்கான மீட்பு நடவடிக்கை தீவிரம்
Nigeria Military Plane Crash, 32 Onboard: நைஜீரியாவில் இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது.
நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஒண்டோ மாநிலம் அருகே, 32 பேரை ஏற்றிச் சென்ற இராணுவ விமானம் விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் பெனின் நகரிலிருந்து லாகோஸ் நோக்கி புறப்பட்டிருந்தது. காலை 9:13 மணிக்கு (உள்ளூர் நேரம்) விமானம் தொடர்பை இழந்ததாக விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

விமானத்தின் சிதைவுகள் இக்போகோடா கடற்படை தளத்திற்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாக நைஜீரிய விமானப் போக்குவரத்து அமைச்சர் பெஸ்டஸ் கெயாமோ உறுதிப்படுத்தினார்.
அவர் சமூக ஊடகத்தில் வெளியிட்ட அறிக்கையில், “விமானத்தின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

விமானத்தில் 25 பயணிகள் மற்றும் 7 குழுவினர்கள் இருந்ததாக ஆரம்ப தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ATR-42 வகை இராணுவ விமானம் ஆகும். நைஜீரிய விமானப்படை, இது ஒரு வழக்கமான பயணமாக இருந்தது என தெரிவித்துள்ளது.
அமைச்சர் கெயாமோ, நைஜீரிய விமானப்படைத் தளபதி ஏர் மார்ஷல் சண்டே கேல்வின் அனேகே உடன் பேசியதாகவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உயிரிழப்புகள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. விமானம் எவ்வளவு சேதமடைந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. மீட்பு குழுக்கள் சம்பவ இடத்தில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |