வெளிநாட்டில் சீன தொழிலதிபருக்கு மரண தண்டனை விதிப்பு: அவர் செய்த குற்றம்
நைஜீரியாவில் தனது காதலியை கொலை செய்த வழக்கில் சீன தொழிலதிபர் ஒருவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது
கடந்த 2022ல் தொடர்புடைய கொலை சம்பவம் நடந்துள்ளது. Ummu Kulthum Sani என்பவர் கத்தியால் கொடூரமாக தாக்கப்பட்ட நிலையில், அவரது அறையில் இருந்து குற்றுயிராக மீட்கப்பட்டார்.
22 வயதான பல்கலைக்கழக மாணவி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் நைஜீரிய மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பொதுவாக நைஜீரியாவில் மரண தண்டனை அரிதாகவே வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்போது மேல்முறையீட்டுக்கு 90 நாட்கள் கால அவகாசம் Frank Geng Quarong என்பவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கொலை குற்றத்தில் ஈடுபடும் ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பதில் தவறில்லை என்றே கொல்லப்பட்ட மாணவியின் உறவினர் தெரிவித்துள்ளார். 49 வயதான Quarong மற்றும் Sani ஆகியோர் 2020ல் இருந்தே காதலித்து வந்துள்ளனர்.
காதலியை கத்தியால் தாக்கி
நைஜீரிய டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தில் Quarong வேலை பார்த்து வந்தார். ஒருகட்டத்தில் காதலர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. Quarong மீது தமக்கு விருப்பம் இல்லை என்றும் Sani தெரிவித்துள்ளார்.
ஆனால் Sani-ஐ விட்டுவிட Quarong விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. இந்த நிலையில் 2022 செப்டம்பர் மாதம் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தமது காதலியை கத்தியால் தாக்கியுள்ளார் Quarong.
குற்றுயிராக மீட்கப்பட்ட Sani மருத்துவமனையில் வைத்து மரணமடைந்துள்ளார். நைஜீரியாவில் மரண தண்டனைக்கு விதிக்கப்பட்ட 3,400 பேர்கள் தற்போதும் சிறையில் உள்ளனர். கடைசியாக 2012ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |