சொந்த வீட்டிலேயே கொடூரமானக் கொலை... அடுத்து நடந்த அதிர்ச்சியும் அருவருப்புமான செயல்
மெல்போர்ன் பெண்ணான் நிக்கிதா வீட்டைவிட்டு வெளியேறி, புதிய வழ்க்கை ஒன்றை துவங்க திட்டமிட்ட நிலையில், தனது மனநிலை பிறழ்ந்த காதலனால் அவர் நெருப்புக் கோலால் அடித்துக் கொல்லப்பட்டார்.
உளவியல் ரீதியாக
சம்பவம் நடந்து இரண்டு நாட்களுக்கு மேல் அவரது உடல் கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பிறகு, நிக்கிதாவின் சகோதரர்கள் அவரது வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று ஜோயல் மிக்கல்லெஃபை எதிர்கொண்டபோதுதான் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

இந்த நிலையில், தற்போது விக்டோரிய மாகாண நீதித்துறை 34 வயதான மிக்கல்லெஃப் தனது செயல்களுக்குப் பொறுப்பல்ல என்று கண்டறிந்துள்ளது.
நிக்கிதாவை மிக மோசமான நிலையில் படுகொலை செய்யும் போது மிக்கல்லெஃப் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருந்தார் என நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 26 அன்று, மெல்போர்னின் வடகிழக்கில் உள்ள சவுத் மோராங் பகுதியில் உள்ள தங்கள் வீட்டிற்குள் நிக்கிதாவை மிக்கல்லெஃப் கொன்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, நிக்கிதாவின் சிதைக்கப்பட்ட உடலை சகோதரர்களான ஷான் மற்றும் டேரன் ஆகியோர் கண்டுபிடித்தனர்.
அந்தப் பயங்கரமான காட்சி அவர்களின் நினைவில் இன்னமும் ஆழமாகப் பதிந்துள்ளது. ஆனால் தற்போது, மிக்காலெஃபை ஒரு உளவியல் மருத்துவ வசதியான தாமஸ் எம்பிளிங் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கான திட்டமும், அவர்களை அதே அளவுக்கு ஆழமாகப் பாதித்துள்ளது.
தங்கள் பார்வையில் ஒரு கொடூரமான கொலையை நியாயப்படுத்துவதற்காக, மிக்கல்லெஃபின் உளவியல் பிரச்சினை மிகைப்படுத்திக் காட்டப்பட்டதாக அந்தச் சகோதரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
நிக்கிதா கொலை வழக்கில் மிக்கல்லெஃபின் நோக்கம் மற்றும் உள்நோக்கத்தை வெளிப்படுத்தும் போதுமான உறுதியான ஆதாரங்கள் இருப்பதாக டேரன் கூறியுள்ளார்.

நிக்கிதா தமது காதலரான மிக்கல்லெஃபை விட்டு வெளியேறி, புதிய வாழ்க்கை ஒன்றை துவங்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இது தொடர்பான விவாதம் இருவருக்கும் இடையே நடந்துள்ளது என்றும் டேரன் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்றத்தில் சாட்சியம்
அத்துடன், மிக்கல்லெஃப் தனது சகோதரியை குடும்ப வீட்டிற்குள் சிறைவைத்து, அவள் உள்ளே இருக்கும்போதே கதவுகளைப் பூட்டிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். உளவியல் பாதிப்பில் இருக்கும் ஒருவர், திட்டமிட்டு இதுபோன்ற செயல்களை முன்னெடுக்க வாய்ப்பில்லை என்ரே டேரனின் வாதமாக உள்ளது.
நிக்கிதா தமது காதலரின் தந்தைக்கு குறுந்தகவல் அனுப்பி தனது நிலையை விளக்கியுள்ளார். இருவருக்கும் இடையே, 36 நிமிடங்கள் நடந்த குறுந்தகவல் உரையாடல், பின்னர் மிக்கல்லெஃஃபால் அழிக்கப்பட்டுள்ளது.

மிக்கல்லெஃப் நிக்கிதாவை தாக்கியபோது, அவர் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும், சித்தப்பிரமை சார்ந்த மாயத்தோற்றங்களுக்கு ஆளாகியிருந்ததாகவும் இரண்டு தடயவியல் மனநல மருத்துவர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர்.
ஆனால் நிக்கிதாவின் குடும்பத்தினர் இதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளனர். மிக்கல்லெஃப் சொன்னது போல், நிக்கிதாவை உண்மையிலேயே தன் பாதுகாப்புக்கும் உயிருக்கும் ஒரு அச்சுறுத்தலாகக் கருதியிருந்தால், ஏன் அவளைப் போக விடவில்லை என்று டேரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிக்கிதாவின் வழக்கை மூடி மறைக்கும் வேலைகள் மட்டுமே நடந்துள்ளது என சகோதரர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |