கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கு: நீதிமன்றத்தின் தீர்ப்பு
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக தொடரப்பட்ட வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என தீர்ப்பளித்து ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மதுரை காமராஜர் பல்கலைகழக உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
வழக்கின் விபரம்
விருதுநகரின் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றியவர் நிர்மலா தேவி.
கடந்த 2018ம் ஆண்டு கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்தியதாக நிர்மலாதேவி பேசும் ஓடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது.
இதனையடுத்து நிர்மலா தேவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவருக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
நிர்மலா தேவி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில் சுமார் 1,160 பக்க குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், நிர்மலா தேவி குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது, இவருக்கான தண்டனை விபரங்கள் குறித்த தகவல்கள் வருகிற செவ்வாயன்று வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.