2024 இடைக்கால பட்ஜெட் உரை: பிரக்ஞானந்தாவை புகழ்ந்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
இந்திய அரசின் இடைக்கால பட்ஜெட் உரையில் செஸ் விளையாட்டு வீரர் பிரக்ஞானந்தாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டினார்.
இந்திய இடைக்கால பட்ஜெட்
இந்தியாவில் ஓரிரு மாதங்களில் பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நேற்று 2024ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று நாடாளுமன்றத்தில் தொடங்கியது.
இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கிய இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 9ம் திகதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் இன்று 2024ம் ஆண்டுக்கான இந்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
பிரக்ஞானந்தாவுக்கு நிதியமைச்சர் புகழாரம்
இந்த பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு அறிவிப்புகளை நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
இதனிடையே செஸ் சாம்பியனும் தமிழ்நாட்டை சேர்ந்தவருமான பிரக்ஞானந்தாவுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புகழாரம் சூட்டி பேசினார். தொடர்ந்து பேசிய அவர், விளையாட்டுத் துறையில் பல இளைஞர்கள் புதிய உயரங்களை தொட்டு வருவதை கண்டு நம்முடைய நாடு பெருமை கொள்கிறது.
செஸ் விளையாட்டின் முதல் நிலை வீரரான பிரக்ஞானந்தா 2023ம் ஆண்டு உலக சாம்பியன் கார்ல்சனுக்கு எதிராக கடுமையான சவால் அளித்தார்.
இந்தியாவில் 2010ம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர்களின் எண்ணிக்கை 20ஆக இருந்தது, ஆனால் தற்போது 80 கிராண்ட் மாஸ்டர்கள் இந்தியாவில் உள்ளனர் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Finance Minister Nirmala Sitharaman praises chess star Praggnanandhaa, Finance Minister Nirmala Sitharaman delivered 2024 interim Budget in indian Parliament, R Praggnanandhaa at Chess World Cup final