முதல்முறையாக பிபா கால்பந்து உலக கிண்ணத்தில் விளையாடும் 2 தமிழர்கள்

Tamils Australia FIFA World Cup Democratic Republic of the Congo
By Karthikraja Jun 03, 2026 08:13 AM GMT
Report

2026 பிபா கால்பந்து உலகக்கிண்ண தொடர், வரும் ஜூன் 11ஆம் திகதி தொடங்கி ஜூலை 19ஆம் திகதி வரை அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.

இந்த தொடரில், பிரேசில், பிரான்ஸ், அர்ஜென்டினா, போர்ச்சுகல் உள்ளிட்ட 48 அணிகள் பங்குபெறுகின்றன.

இந்த முறை முதல்முறையாக, தமிழ் வம்சாவளியை சேர்ந்த இரு வீரர்கள் பிபா கால்பந்து உலகக்கிண்ண தொடரில் விளையாட உள்ளனர்.

நிஷான் வேலுப்பிள்ளை (Nishan Velupillay)

25 வயதான நிஷான் வேலுப்பிள்ளை, 2026 கால்பந்து உலகக்கிண்ணத்திற்கான அவுஸ்திரேலிய அணியில் இடம் பிடித்துள்ளார். 

முதல்முறையாக பிபா கால்பந்து உலக கிண்ணத்தில் விளையாடும் 2 தமிழர்கள் | Nishan And Samuel Tamils To Play In Fifa Worldcup

அவுஸ்திரேலியாவில் பிறந்த நிஷான் வேலுப்பிள்ளையின் தந்தை சசிநாத் வேலுப்பிள்ளை இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த மலேசியாவை சேர்ந்தவர் ஆவார். இவரின் தாய் கில்லியன் வேலுப்பிள்ளை ஆங்கிலோ இந்தியர் ஆவார்.

நிஷான் வேலுப்பிள்ளை, க்லென் எய்ரா எவ்சி, மெல்பர்ன் விக்டரி ஆகிய கழகங்களுக்காக விளையாடியுள்ளார்.

2024 ஆம் ஆண்டில் அவுஸ்திரேலியா தேசிய அணியில் இடம் பிடித்த இவர், சீனாவிற்கு எதிரான தகுதி சுற்று போட்டியில், 83ஆவது நிமிடத்தில் மாற்று வீரராக களம் புகுந்த நிஷான் வேலுப்பிள்ளை, அடுத்த 7வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். இந்த போட்டியில், அவுஸ்திரேலியா 3 - 1 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

முதல்முறையாக பிபா கால்பந்து உலக கிண்ணத்தில் விளையாடும் 2 தமிழர்கள் | Nishan And Samuel Tamils To Play In Fifa Worldcup

அதைத்தொடர்ந்து இந்தோனேசியா மற்றும் சீனாவிற்கு எதிரான போட்டியிலும் விளையாடி இருந்தார்.

பிபா உலகக் கிண்ணத்தில் டி பிரிவில் இடம்பெற்றுள்ள அவுஸ்திரேலியா, தனது ஆரம்பப் போட்டியில் ஜூன் 14ஆம் திகதி துருக்கியையும், ஜூன் 20ஆம் திகதி அமெரிக்காவையும், ஜூன் 26ஆம் திகதி பரகுவேவையும் எதிர்த்தாட உள்ளது.

சாமுவேல் மோட்டுசமி (Samuel Moutoussamy)

29 வயதான சாமுவேல் மோட்டுசமி, 2026 கால்பந்து உலகக்கிண்ணத்திற்கான காங்கோ மக்களாட்சிக் குடியரசு அணியில் இடம் பிடித்துள்ளார்.

பிரான்சில் பிறந்த இவரின் முழுப்பெயர் சாமுவேல் ஆல்பர்ட் அலைன் ஆர்கேட் மோட்டுசமி ஆகும். இவரின் தந்தை தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட இந்தோ - குவாடலூப்பியர் ஆவார். 

முதல்முறையாக பிபா கால்பந்து உலக கிண்ணத்தில் விளையாடும் 2 தமிழர்கள் | Nishan And Samuel Tamils To Play In Fifa Worldcup

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோட்ட வேலைக்காக தென் இந்தியாவில் இருந்து பிரான்சின் ஆளுகையின் கீழ் உள்ள குவாடலூப்பியருக்கு அழைத்து வரப்பட்டவர்கள் ஆவார். இவரின் தாய் காங்கோவை பூர்விகமாக கொண்டவர்.

2019 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமான இவர், காங்கோ ஜனநாயகக் குடியரசு அணிக்காக 57 போட்டிகளில் விளையாடியுள்ளார். 

காங்கோ அணி ஜூன் 17 ஆம் திகதி போர்ச்சுகலையும், ஜூன் 23 ஆம் திகதி கொலம்பியாவையும், ஜூன் 27 ஆம் திகதி உஸ்பெஸ்கிஸ்தானையும் எதிர்கொள்ள உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, நல்லூர், கனடா, Canada

02 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இறுப்பிட்டி, கொழும்பு, யாழ்ப்பாணம்

26 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Luton, United Kingdom, Toddington, United Kingdom, Milton Keynes, United Kingdom

02 Jun, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

02 Jun, 2013
மரண அறிவித்தல்

காரைநகர், யாழ்ப்பாணம், Toronto, Canada

31 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, இளவாலை

02 Jun, 2016
மரண அறிவித்தல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, London, United Kingdom

01 Jun, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஸ்கந்தபுரம், வவுனியா

01 Jun, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், மாங்குளம், Amsterdam, Netherlands, Nuremberg, Germany

01 Jun, 2024
மரண அறிவித்தல்

இணுவில், Neuss, Germany, Markham, Canada

30 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

22 May, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada

30 May, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US