காயத்ரி மந்திரம் பொறித்த சேலையை அணிந்த நீடா அம்பானி.., ஆவேசமாக விமர்சித்த நடிகை ஷர்மிளா
ஆனந்த் அம்பானி திருமணத்தில் காயத்ரி மந்திரம் பொறித்த சேலையை நீடா அம்பானி அணிந்திருந்தது குறித்து நடிகை ஷர்மிளா விமர்சித்துள்ளார்.
நீடா அம்பானியின் சேலை
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் ஜூலை 12 -ம் திகதி ஜியோ வேர்ல்ட் கன்வென்ஷன் சென்டரில் உள்ள பிரமாண்ட வளாகத்தில் திருமணம் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து இரண்டு நாட்களாக திருமணத்தையொட்டி பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இத்திருமணத்திற்கு இந்திய தலைவர்கள் முதல் சர்வதேச தலைவர்கள் வரை வந்தனர்.
தமிழ் பிரபலங்களான ரஜினிகாந்த் மற்றும் அவரது குடும்பம், நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா, அட்லீ மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதோடு, கிரிக்கெட் வீரர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இந்த திருமணத்துக்காக ரூ.5,000 கோடி வரை செலவிடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், முக்கிய விருந்தினர்களுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் கைக்கடிகாரம் பரிசாக வழங்கப்பட்டது.
இந்த திருமணத்தின் அம்பானி வீட்டு குடும்பத்தினர் விலையுயர்ந்த நகைகளையும், ஆடைகளையும் அணிந்திருந்தனர்.
அந்தவகையில், காயத்ரி மந்திரம் பொறித்த சேலையை முகேஷ் அம்பானி மனைவி நீடா அம்பானி அணிந்திருந்தார். இந்த புடவை கவனத்தை ஈர்க்கும் வகையில் இருந்தது.
குப்பை தொட்டியில் கிடந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள வைர நெக்லஸ்.., தூய்மை பணியாளர் செய்த நெகிழ்ச்சி செயல்
ஷர்மிளா விமர்சனம்
இந்நிலையில், காயத்ரி மந்திரம் பொறித்த சேலையை நீடா அம்பானி அணிந்திருந்தது தொடர்பாக பாஜக எதிர்ப்பாளரும், திமுக ஆதரவாளரும், நடிகையுமான ஷர்மிளா கருத்து தெரிவித்து வீடியோவில் பேசியுள்ளார்.
அவர் அந்த வீடியோவில், "முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி அணிந்திருந்த சேலையில் காயத்ரி மந்திரத்தை சேர்த்து நெய்துள்ளார்கள். இந்த புடவையை அவர் போட்டோகிராபர்களுக்கு காட்டும் வகையில் காலால் புடவையை அட்ஜஸ்ட் செய்கிறார்.
சங்கிகளுக்கு நான் ஒரு கேள்வி கேட்கிறேன். நீடா அம்பானி காயத்ரி மந்திரம் பொறித்த சேலையை காலால் உதைக்கும் போது உங்களது கலாச்சாரம் பாதிக்கப்படவில்லையா? இந்து மதம் புண்படுத்தப்படவில்லையா?
அவமானப்படுத்தப்படவில்லையா? பணக்காரர்கள் எது செய்தாலும் ஓகே. இதுதான் இரட்டை நிலைப்பாடா? இதற்கு பதில் சொல்லுங்கள்" என்று பேசியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |