நீதா அம்பானி பயன்படுத்தும் தங்க தண்ணீர் போத்தல்., அதன் விலைக்கு ஒரு வீட்டையே வாங்கலாம்
இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி, தனது ஆடம்பரமான வாழ்க்கை முறைக்காக அடிக்கடி செய்திகளில் இடம்பெறுகிறார்.
சமீபத்தில், அவர் பயன்படுத்தியதாகக் கூறப்படும் தண்ணீர் போத்தல் விலை உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது போத்தல் “அக்வா டி கிறிஸ்டலோ டிரிப்யூட்டோ மோடிலியானி” எனப்படும் பிராண்டைச் சேர்ந்தது என்றும் இந்த போத்தலின் விலை 60,000 அமெரிக்க டொலர் (சுமார் 45 லட்சம் ரூபாய்) என்றும் கூறப்படுகிறது.

உலகின் மிக விலையுயர்ந்த போத்தல்
இது சாதாரண தண்ணீர் போத்தல் அல்ல. 24 காரட் தங்கம் மற்றும் பிளாட்டினம் கொண்டு வடிவமைக்கப்பட்டு, உலகின் மிக விலையுயர்ந்த போத்தல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
இந்த போத்தல், பிரான்ஸ் மற்றும் ஃபிஜி போன்ற நாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் தூய்மையான இயற்கை நீரால் நிரப்பப்படுகிறது. உலகின் மிகச் சிலருக்கே இந்த போத்தலைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கிறது.
சமூக ஊடகங்களில், “ஒரு தண்ணீர் போத்தலுக்கே இவ்வளவு பணம் செலவிடுவது தேவையா?” என்ற கேள்வி எழுந்துள்ளது. பலர் இதை “ஆடம்பரத்தின் உச்சம்” என விமர்சிக்கின்றனர்.
உண்மை என்ன?
ஆனால், உண்மை என்னவென்றால், நீதா அம்பானி அந்த போத்தலைப் பயன்படுத்தவில்லை. அவர் அந்த பொத்தலை பயன்படுத்துவது போல் மார்ஃபிங் செய்யப்பட புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
அவரது உண்மையான புகைப்படத்தில், அவர் சாதாரண மினரல் வாட்டர் போத்தலைத் தான் பயன்படுத்துகிறார்.
ஆனாலும் அவரைப் பற்றிய இந்த வதந்தி இன்னும் பரவிவருகிறது. அவரோ, அம்பானி குடும்ப உறுப்பினர்களோ யாரும் இந்த போத்தலை பயன்படுத்துவதாக எந்த படத்தையும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |