சம்பளமுமில்லை..சாப்பாடுமில்லை.. பாகிஸ்தான் ராணுவ வீரர்களின் இக்கட்டான நிலை!
கடந்த சில மாதங்களாகப் பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவு பாதிக்கப்பட்டுள்ளதால் ராணுவ வீரர்களுக்கான அடிப்படைத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல் எழுந்துள்ளது.
பொருளாதார நெருக்கடி
பாகிஸ்தான் நாட்டில் நடந்து கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், அந்நாட்டின் வெளிநாட்டுக் கடன் மற்றும் பொறுப்புகள் கிட்டத்தட்ட $130 பில்லியன் - அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 95.39 சதவிகிதத்தை எட்டியுள்ளன. சமீபத்திய தரவுகளின்படி, பணவீக்கம் 48 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்சமாக, தற்போது 27.6 சதவீதமாக உள்ளது. ஜனவரி 2023 இல், உணவுப் பணவீக்கம் கடந்த ஆண்டு 12.8 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 42.9 சதவீதத்தை எட்டியுள்ளது, இதனால் பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.
உணவு பற்றாக்குறை
நாட்டின் நிதிப் பற்றாக்குறையால் வெளிநாடுகளிலிருந்து உணவுப்பொருட்களை வாங்கக் கூட பணம் இல்லாத நிலைக்குப் பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இதனால் கோதுமை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை கற்பனை செய்ய முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இப்போதைய சூழலில், பாகிஸ்தானில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தால் இரு வேளை உணவு உண்பதே கடினமானதாக மாறிவிட்டது.
ராணுவத்திற்கான செலவு
தற்போது பொருளாதாரச் சிக்கல்கள் அந்நாட்டின் இராணுவத்தையும் தாக்கியுள்ளன.ராணுவ வீரர்களுக்கான சம்பளமும், சாப்பாட்டிற்குமான செலவு குறைக்கப்பட்டுள்ளதால் ராணுவ வீரர்கள் பல இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர். @File Image பாகிஸ்தானின் மொத்த பாதுகாப்பு நிதிநிலை 2022-23ல் $7.5 பில்லியன் ஆகும்.
ஆரம்பக்கால அறிகுறிகள் இருந்தபோதிலும், 2021-22ல் இராணுவ செலவினங்களை விட 12 சதவீதமும்,சரி செய்யப்படச் செலவினங்களை விட 3 சதவீதமும் பாதுகாப்பு ஒதுக்கீடு உயர்த்தப்பட்டது. உண்மையில், புதிய பாதுகாப்பு வரவுசெலவுத்திட்டமானது ஆண்டுக்கான மொத்த அரசாங்க செலவினத்தில் 16 சதவீதமாகும். தரவுகளின்படி, மொத்த கையிருப்பு $3.2 பில்லியன் மட்டுமே. வெறும் 2 சதவிகிதம் குறைந்த பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன், பாகிஸ்தான் அரசாங்கம் தனது இராணுவத்தைக் காக்கப் போராடி வருகிறது.