காலியாக கிடந்த திருமண மண்டபம்! அமெரிக்காவில் புதுமண தம்பதிக்கு காத்திருந்த அதிர்ச்சி
அமெரிக்காவில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 5 பேர் மட்டுமே கலந்து கொண்டதால் மணமகள் சோகத்தில் மூழ்கினார்.
சோகத்தில் மூழ்கிய மணமகள்
அமெரிக்காவை சேர்ந்த கலினா மேரி(Kalina Marie) என்ற மணமகள் தன்னுடைய கனவு திருமணத்திற்காக காத்து இருந்துள்ளார்.
இதற்காக அலங்கரிக்கப்பட்ட திருமண மண்டபத்திற்கு வந்த கலினா மேரிக்கு மிகவும் அதிர்ச்சிகரமான பரிசு காத்திருந்துள்ளது.
அதாவது திருமண மண்டபத்தில் பெரும்பாலான நண்பர்கள், உறவினர்கள் என யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
மாதக்கணக்காக திட்டமிட்ட திருமண விழாவுக்கு 75 பேரை இணைய வழியாகவும், 25 பேருக்கு நேரடியாகவும் அழைப்பிதழும் அனுப்பியிருந்த கலினா மேரிக்கு, வெறும் 5 பேர் மட்டுமே திருமண நிகழ்ச்சி வந்து அதிர்ச்சி தந்துள்ளனர்.
வைரலான வீடியோ
இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிர்ந்த வீடியோவில், கலினா மற்றும் அவரது கணவர் ஷேன், முகத்தில் ஏமாற்றத்துடன் மண்டபத்திற்குள் நுழைவதைக் காணலாம்.
அவர்களுடன் வந்த அவர்களின் குழந்தை மட்டும் அவர்களை மைலி சைரஸின் "When I Look at You" பாடலுடன் திருமண மேடைக்கு அழைத்துச் சென்றது.
அத்துடன் "நீங்கள் வீடியோவில் பார்க்கிறீர்கள், நாங்கள் மண்டபத்திற்குள் நுழைகிறோம். ஆனால் இங்கு யாரும் இல்லை," என்று கலினா தனது சமூக ஊடக பதிவில் அதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
இந்தக் கசப்பான அனுபவத்திற்குப் பிறகும், கலினா மற்றும் ஷேன் தங்கள் திருமண நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்து நடனத்துடன் அவர்களது காதலை கொண்டாடினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |