எந்தவொரு அரசியல் பின்புலமும் கிடையாது.., யூடியூபர் இர்ஃபான் விளக்கம்
குழந்தையின் தொப்புள் கொடி விவகாரம் தொடர்பாக வந்த விமர்சனத்திற்கு யூடியூபர் இர்ஃபான் விளக்கம் அளித்துள்ளார்.
யூடியூபர் இர்ஃபான் விளக்கம்
பிரபல யூடியூபர் இர்ஃபான், சில மாதங்களுக்கு முன்பு தனது மனைவின் வயிற்றில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை துபாயில் ஸ்கேன் எடுத்து அறிவித்தார்.
பாலினத்தை அறிவிப்பது இந்திய சட்டப்படி குற்றம் என்பதால் அவர் மீது வழக்கு பதிவு செய்ய புகார்கள் வந்தது. ஆனால், அவர் மன்னிப்பு கூறியதால் நடவடிக்கை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, தனது மனைவியின் பிரவசத்தில் அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை வெளியிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழகத்தின் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இர்பான் மன்னிப்பு கேட்டாலும் விடமாட்டோம். மருத்துவ சட்ட விதிகளை இர்பான் மீறியுள்ளார். சட்ட ரீதியாகவும், துறை ரீதியாகவும் நடவடிக்கை தொடரும்" என்று கூறியிருந்தார்.
அதன்படி, சம்மந்தப்பட்ட மருத்துவமனையின் சேவை 10 நாட்களுக்கு முடக்கப்பட்டது. மேலும், 50,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
பின்னர், யூடியூபர் இர்ஃபான் தொப்புள் கொடி விவகாரம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து மருத்துவத்துறைக்கு கடிதம் அனுப்பினார்.
இதனிடையே, ஆளும் திமுகவுடன் யூடியூபர் இர்பான் நெருக்கமாக உள்ளதால்தான் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில், இந்த விமர்சனங்கள் தொடர்பாக இர்பான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், "தமிழகத்தின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நான் வெளியிட்ட வீடியோ புரொமோஷனுக்கு மட்டுமே. அதனை வைத்து என்னை எப்படி ஆதரிப்பார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக, என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு சட்டத்தின் அடிப்படையில்தான் நீதிமன்றம் செயல்படுகிறது. எனக்கு எந்தவொரு அரசியல் பின்புலமும் கிடையாது" என்று விளக்கம் அளித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |