உக்ரைனின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை: ஜெலென்ஸ்கி தகவல்
போர் நிறைவடையும் வரை உக்ரைனில் ஜனாதிபதி தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தீராமல் தொடரும் போர்
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில் பதிலடி தாக்குதலை நடத்த தொடங்கி இருக்கும் உக்ரைன், ரஷ்ய படைகள் கைப்பற்றி வைத்து இருந்த 8 உக்ரைனிய கிராமங்களை அதிரடியாக மீட்டுள்ளனர்.
அத்துடன் சமீபத்தில் ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்கு கெர்சன் பகுதியை கிரிமியாவுடன் இணைக்கும் சாலை பாலத்தை உக்ரைனிய ஆயுதப் படைகள் ஏவுகணை மூலம் தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
ரஷ்யாவும் உக்ரைனின் தாக்குதலுக்கு பதிலடிகள் கொடுக்கும் விதமாக திடீர் ட்ரோன் தாக்குதல் மற்றும் ஏவுகணை தாக்குதல் ஆகியவற்றை நடத்தி வருகிறது.
ஜனாதிபதி தேர்தல் இப்போதைக்கு இல்லை
இந்நிலையில் 2023 ஆண்டு வரும் அக்டோபர் 29ம் திகதி உக்ரைனில் நடத்த திட்டமிட்டிருந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க பத்திரிகைக்கு ஜெலென்ஸ்கி வழங்கிய நேர்காணலில், உக்ரைனில் போர் நடைபெற்று வருகிறது இதனால் நாடு முழுவதும் இராணுவ சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
There will be no presidential elections in #Ukraine until the end of the war, stated President #Zelenskyy. pic.twitter.com/adDBIcdWo8
— NEXTA (@nexta_tv) June 23, 2023
நாட்டில் இராணுவ சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு இருக்கும் போது எத்தகைய தேர்தலும் நடத்தப்பட கூடாது.
ஒருவேளை இராணுவ சட்டம் நடைமுறைப்படுத்த படவில்லை என்றால் தேர்தல் நடத்தப்பட்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் சட்ட விதிமுறைகளின் படி, இராணுவ சட்டம் நிறைவடைந்த 90 நாட்களுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படலாம் என்று நினைக்கிறேன் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |