பிளாஸ்டிக் கவர்களில் உணவு விற்க அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
அரிசி, பால் போன்ற உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவர்களினால் அடைத்து விற்பனை செய்ய முடியும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு
ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு பிளாஸ்டிக் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
நடுத்தர தொழில்கள் துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், உணவு பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க அளிக்கப்பட்ட விலக்கை ரத்து செய்து 2020ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக அமல்படுத்துவது சாத்தியமில்லாததால், தடை உத்தரவை மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கு அனுமதி தர வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
அதன்படி, பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |