பெருவெள்ளத்தில் மொத்தமாக மூழ்கிய வட இந்தியா: அதிகரிக்கும் இறப்பு எண்ணிக்கை
வட இந்தியாவின் பெரும்பாலான இடங்களில் கொட்டித்தீர்க்கும் பேய் மழைக்கு இதுவரை 12 பேர்கள் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கனமழை முதல் மிக கனமழை
அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என்றே வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், டெல்லி, ஹரியானா, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
Thunag, Himachal Pradesh pic.twitter.com/oVQC1slPxy
— Shiv Aroor (@ShivAroor) July 9, 2023
டெல்லியின் பெரும்பாலான பகுதிகள் பெருவெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் டெல்லியில் 153 மிமீ மழை பதிவாகியுள்ளது. இது 1982ம் ஆண்டுக்குப் பிறகு ஜூலை மாதத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக பதிவான மழையின் அளவு என கூறுகின்றனர்.
9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்றும் கனமழை பெய்து வருகிறது. குருகிராமின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதுடன் மின்சாரம் தடைபட்டுள்ளது. ஜூலை 15 வரையில் மழை விட்டுவிட்டு பெய்யக் கூடும் என்றே வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாகாணத்தில் 9 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தொடர் மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆண்டுதோறும் முன்னெடுக்கப்படும் அமர்நாத் யாத்திரையில் இன்று மூன்றாவது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் நேற்று சாலையின் ஒரு பகுதி பள்ளம் விழுந்ததில் சுமார் 3,000 வாகனங்கள் நகர முடியாமல் சிக்கியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |