துபாய் நிறுவனம் ஒன்றிடம் ரூ 13,000 கோடியை கொள்ளையிட்ட வடகொரியா: உறுதி செய்த அமெரிக்கா
ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து செயல்படும் பிரபலமான Bybit நிறுவனத்தில் இருந்து 1.5 பில்லியன் டொலர் மதிப்புள்ள கிரிப்டோகரன்சியை வடகொரிய சைபர் குற்றவாளிகள் கொள்ளையிட்ட சம்பவம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கிரிப்டோ கொள்ளை
வரலாற்றிலேயே மிக மோசமான கிரிப்டோ கொள்ளை என அடையாளப்படுத்தப்பட்டுள்ள இச்சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த அமெரிக்க அதிகாரிகள் இதை உறுதி செய்துள்ளனர்.
2003ல் ஈராக் போருக்கு முன்னர் அந்த நாட்டின் தேசிய வங்கியில் இருந்து 1 பில்லியன் டொலர் கொள்ளையிடப்பட்ட சம்பவமே சாதனையாக கருதபப்ட்டு வந்தது. தற்போது வடகொரிய சைபர் குற்றவாளிகள் அதை முறியடித்துள்ளனர்.
Bybit கிரிப்டோகரன்சி நிறுவனத்தில் இருந்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள தொகையை அவர்கள் உள்ளூர் பணமாக மாற்றக் கூடும் என்றும் அமெரிக்காவின் FBI புதன்கிழமை எச்சரித்துள்ளது.
இந்த கொள்ளை சம்பவமானது வடகொரியாவின் Lazarus என்ற குழு முன்னெடுத்துள்ளதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவர்களே வடகொரியாவின் அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டங்களுக்கு நிதியளிக்க இணையமூடாக பெரும் கொள்ளைகளில் ஈடுபட்டு வருபவர்கள்.
உதவ வேண்டும்
2024ல் மட்டும் மொத்தம் 47 கொள்ளை சம்பவங்களில் Lazarus குழு ஈடுபட்டுள்ளது. 2023ல் இவர்கள் சுமார் 660 மில்லியன் டொலர் மதிப்பிலான கிரிப்டோகரன்சியை கொள்ளையிட்டுள்ளனர்.
Bybit கிரிப்டோகரன்சி நிறுவனத்தில் இருந்து மட்டும் இந்த முறை ரூ 13,079 கோடியை கொள்ளையிட்டுள்ளனர். துபாயில் கடந்த 2018ல் துவங்கப்பட்ட பைபிட் நிறுவனத்தின் தற்போதைய சொத்துமதிப்பு 15 பில்லியன் பவுண்டுகள் என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, வடகொரியாவால் கொள்ளையிடப்பட்ட தொகையை மீட்டுத்தர இந்த விவகாரத்தில் வல்லுநர்கள் உதவ வேண்டும் என்றும் Bybit கோரிக்கை வைத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |