அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடங்கும் முன்..வடகொரியா பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடங்குவதற்கு சிலமணிநேரங்களுக்கு முன், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியதாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது.
பாலிஸ்டிக் ஏவுகணை
வடகொரியா அதன் கிழக்குக் கடலை நோக்கி, பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
இதனை தெரிவித்துள்ள தென்கொரியாவின் கூட்டுப் படைத்தலைவர்கள், கண்டறியப்பட்ட ஏவுகணைகளின் எண்ணிக்கை அல்லது அவை எவ்வளவு தூரம் பறந்தன என்பதை உடனடியாக குறிப்பிடவில்லை.
எனினும் ஏவுகணைகள் சுமார் 400 கிலோமீற்றர் தூரம் வரை பாய்ந்து சென்று கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
தேர்தல் தொடங்கும் முன்
அதேபோல் ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் கூறும்போது, ஏவுகணைகள் ஏற்கனவே கடலில் விழுந்துவிட்டதாக நம்பப்படுவதாகவும், சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் தேர்தல் நடைபெற சிலமணிநேரங்களே உள்ள சூழலில், வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |