எந்தவொரு முன்னறிவிப்பின்றி வடகொரியா செய்த செயல்: விண்ணில் பாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை
ஹ்வாசாங்-15 வகை கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சமீபத்தில் செலுத்தியதாக வட கொரியா உறுதிப்படுத்தியுள்ளது.
இராணுவ பயிற்சி
வட கொரியாவின் தொடர் ஏவுகணை பயிற்சி மற்றும் அணு ஆயுத சோதனைகள் ஆகியவை கொரிய தீபகற்ப பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதற்கிடையில் வட கொரியாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் அமெரிக்கா, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து இராணுவ பயிற்சிகளை நடத்தி வருகின்றனர்.
EPA
வட கொரியா கடந்த 5 மாதங்களில் மட்டும் கிட்டத்தட்ட 100 ஏவுகணைகள் வரை ஏவி தென் கொரியா மற்றும் ஜப்பான் பிராந்தியங்களை அச்சுறுத்தியுள்ளது.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை
இந்நிலையில் “இராணுவ அச்சுறுத்தல்கள்” என்று அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் கூற்றுக்கு பதிலடியாக, வட கொரியா அதன் அணுசக்தியை நிரூபிக்கும் வகையில் கிழக்குக் கடலை நோக்கி ஹ்வாசாங்-15 (Hwasong-15) வகையின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) செலுத்தியதாக தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 18ம் திகதி அதிகாலை வழங்கப்பட்ட அவசரகால ஃபயர் பவர் போர் காத்திருப்பு உத்தரவின் கீழ் முன்னறிவிப்பின்றி இந்த பயிற்சி திடீரென ஏற்பாடு செய்யப்பட்டது என்று கொரிய மத்திய செய்தி நிறுவனத்திற்கு மத்திய இராணுவ ஆணையம் வழங்கிய அறிக்கை தெரிவித்துள்ளது.
AP
அந்த அறிக்கையின் படி, பியோங்யாங்கில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இந்த ஏவுதல் நடந்தது.
இந்த ஏவுகணை 989 கிலோமீட்டர் தூரத்தை 4,015 வினாடிகளுக்கு 5,768.5 கி மீ உயரத்தில் பறந்து கிழக்குக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் தரையிறங்கியுள்ளது.