வரலாற்றின் பெரிய கிரிப்டோ கொள்ளையை செய்த வட கொரியா ஹேக்கர்கள்
வட கொரியா ஹேக்கர்கள் 1.5 பில்லியன் டொலர் கிரிப்டோ நாணயத்தை கொள்ளையடித்துள்ளனர்.
ரூ.13,000 கோடி கிரிப்டோ கொள்ளை
வடகொரியாவை சேர்ந்த ஹேக்கர்கள் வரலாற்றிலேயே அதிக அளவிலான கிரிப்டோவை கொள்ளையடித்துள்ளனர். இவர்களின் பின்னணியில் வட கொரிய அரசு இருப்பதாக கூறப்படுகிறது.
Lazarus Group என அழைக்கப்படும் இந்த ஹேக்கர்கள், ByBit என்னும் கிரிப்டோ வர்த்தக நிறுவனத்திலிருந்து 1.5 பில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் சுமார் ரூ.13,000 கோடி) மதிப்பிலான கிரிப்டோவை கொள்ளையடித்துள்ளனர்.
இதன் மூலம் கிடைக்கும் பணத்தை ஹேக்கிங் குழுவினர், வட கொரியாவின் ராணுவ மேம்பாட்டிற்கு வழங்குவதாக கூறப்படுகிறது.
மீட்க திட்டம்
திருடப்பட்ட கிரிப்டோ நாணயங்களின் தடத்தை பின் தொடர்ந்து, அதை முடக்குவதற்கு பொதுமக்கள் ஊக்குவிக்க்கும் வகையில், லாசரஸ் பவுண்டி என்ற திட்டத்தை பைபிட் நிறுவனம் தொடங்கியுள்ளது.
கிரிப்டோ பரிமாற்றங்களை அனைவராலும் அணுகத்தக்க தரவுத் தளத்தில் பார்க்க முடியும் என்பதால், திருடப்பட்ட கிரிப்டோ நாணயங்களை பின்தொடர்ந்து, அதை பணமாக மாற்ற முயற்சிக்கும் போது, அந்த கிரிப்டோ நாணயங்கள் குற்றப் பின்னணி கொண்டதாக இருந்தால் அதை முடக்க முடியும்.
இதன் மூலம் 40 மில்லியன் டாலர்களை பரிமாற முயன்ற போது கண்டறிந்து எச்சரிக்கை வழங்கியதற்காக இதுவரை 20 பேர், 4 மில்லியன் டொலருக்கும் அதிகமான வெகுமதியை பெற்றுள்ளனர்.
ஆனால் 300 மில்லியன் டொலர் பணத்தை மீட்க முடியாத வகையில், ஹேக்கர்கள் மாற்றியுள்ளனர்.
முன்னதாக வங்கிகளை குறிவைத்த லாசரஸ் குழு, கடந்த 5 ஆண்டுகளாக கிரிப்டோ நாணய நிறுவனங்களை இலக்கு வைத்து தாக்கி வருகிறது.
மற்ற ஹேக்கர்களை விட இதில் அதிக நிபுணத்துவம் பெற்ற வடகொரியா ஹேக்கர்கள், இதுவரை பல ஆயிரம் கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சியை கொள்ளையிட்டுள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |