வட கொரிய ஜனாதிபதி கிம் யோங் நாம் மரணம்: இரங்கல் தெரிவித்த கிம் ஜோங் உன்
வட கொரியாவில் இரண்டு தசாப்தங்களாக, நாட்டின் சம்பிரதாயபூர்வ ஜனாதிபதியாக பொறுப்பில் இருந்து வந்த கிம் யோங் நாம் வயது மூப்பு காரணமாக மரணமடைந்துள்ளார்.
சம்பிரதாய ஜனாதிபதி
ஆளும் கிம் குடும்பத்திற்கு வாழ்நாள் முழுவதும் விசுவாசமாக இருந்த வட கொரிய அதிகாரி இவர். வட கொரிய நாடாளுமன்றத்தில் சம்பிரதாய ஜனாதிபதியாக பதவி வகித்து வந்த இவர் 97 வயதில் மரணமடைந்துள்ளார்.

வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் செவ்வாய்க்கிழமை கிம் யோங் நாம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்க அவரது நினைவிடத்திற்குச் சென்றதாக அரசு செய்தி ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
கிம் யோங் நாமின் இறுதிச் சடங்கு வியாழக்கிழமை நடைபெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கிம் யோங் நாம், வட கொரியாவை மூன்று தலைமுறையாக ஆண்டு வரும் கிம் குடும்பத்தினருடன் தொடர்புடையவர் அல்ல என்றே கூறுகின்றனர்.
கிம் ஜாங் உன், வட கொரியாவை நிறுவிய கிம் இல் சுங்கின் பேரனாவார். 2011 ஆம் ஆண்டு தனது தந்தை கிம் ஜாங் இல் இறந்ததைத் தொடர்ந்து, நாட்டின் இரண்டாவது பரம்பரை அதிகாரப் பரிமாற்றத்தில் கிம் ஜாங் உன் ஆட்சிக்கு வந்தார்.

வரவேற்கும் பொறுப்பு
கிம் யோங் நாம் 1998 முதல் ஏப்ரல் 2019 வரை உச்ச மக்கள் சபையின் தலைவராக பணியாற்றினார். நாட்டின் ஜனாதிபதி பொறுப்பு அதுவென்றாலும், அதிகாரங்கள் மொத்தமும் கிம் குடும்பத்தினரிடமே இருக்கும்.
கிம் ஜாங் உன் மற்றும் அவரது மறைந்த தந்தை கிம் ஜாங் இல் சார்பாக, வருகை தரும் வெளிநாட்டு பிரமுகர்களை வரவேற்கும் பொறுப்பு மட்டுமே நாட்டின் ஜனாதிபதி என்கிற முறையில் கிம் யோங் நாம் என்பவருக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால், வயது காரணமாக 2018 மற்றும் 2019ல் ஜனாதிபதி ட்ரம்பை வரவேற்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. ஏப்ரல் 2019 இல், கிம் யோங் நாமுக்குப் பதிலாக சோ ரியோங் ஹே ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |