தீயாய் பரவும் கொரோனா...அமெரிக்காவின் உதவியை மறுக்கும் வடகொரியா: ஜோ பைடன் தகவல்
அமெரிக்கா வழங்க முன்வந்த தடுப்பூசி தொகுப்பு குறித்து வட கொரிய அரசாங்கம் எந்தவொரு பதிலையும் இதுவரை வழங்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவில் முதல்முறையாக கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 2.5 மில்லியன் மக்கள் காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகளுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போதிய தடுப்பூசி கையிருப்பு மற்றும் பரிசோதனை உபகரணங்கள் வட கொரியாவின் வசம் இல்லாததால் கொரோனா பரவல் விகிதமானது வேகமாக அதிகரித்து வருகிறது.
REUTERS
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், வட கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசி மற்றும் பரிசோதனை உபகரணங்களை வட கொரியாவிற்கு உடனடியாக வழங்க அமெரிக்க தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
அத்துடன் இந்த தடுப்பூசி பகிர்வை வட கொரியாவுடன் சேர்த்து சீனாவிற்கும் அமெரிக்க வழங்க தயாராக இருப்பதாக தகவல் தெரிவித்து இருந்தார்.
KCTV / AFP
இந்நிலையில், தென் கொரியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்கா வழங்க முன்வந்த தடுப்பூசி பகிர்வு குறித்த அறிக்கைக்கு வட கொரியா இதுவரை எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும், ஆனால் அதுத் தொடர்பாக அவர் எவ்வளவு தீவிரமாக மற்றும் நேர்மையாக உள்ளார் என்பதை பொறுத்து இருப்பதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
REUTERS
கூடுதல் செய்திகளுக்கு; டோக்கியோ குவாட் உச்சி மாநாடு: உலக தலைவர்களை தனித்தனியே சந்திக்கும் புதிய அவுஸ்திரேலிய பிரதமர்
இவற்றில் குறிப்பிடத்தக்க விசயம் என்வென்றால், வட கொரியாவின் கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகளாவிய தடுப்பூசி பகிர்வு திட்டம் மற்றும் தென் கொரியா வழங்க முன்வந்த தடுப்பூசி உதவிகளையும் வட கொரியா மறுத்து விட்டது குறிப்பிடதக்கது.