கொத்து குண்டுகளை கையில் எடுத்த வட கொரியா: ஒரே குண்டு.,32 ஏக்கருக்கு அழிவு
North Korea test cluster bombs: பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பொருத்தப்பட்ட கொத்து குண்டுகளை வட கொரியா சோதனை செய்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆய்வு செய்யப்பட்ட கொத்து குண்டுகள்
கிம் ஜாங் உன் தலைமையிலான வட கொரியா, தொடர்ந்து ஏவுகணை மற்றும் நவீன ஆயுதங்களை சோதனை செய்து வருகிறது.
அந்த வரிசையில் பாலிஸ்டிக் ஏவுகணைகளில் பொருத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட கொத்துக் குண்டுகளை வட கொரியா சோதித்துள்ளது.
போருக்கான தயார் நிலை மற்றும் ஸ்டாண்டர்ட் டைப்-2 கொத்து குண்டுகளின் திறனை மதிப்பிடும் வகையில் இந்த சோதனையானது கடந்த சனிக்கிழமை நடந்துள்ளது.

இதனை அந்நாட்டின் ராணுவ ஜெனரலான கிம் ஜாங் சிக் மேற்பார்வையிட்டார்.
கொத்துக் குண்டுகளின் பண்புகள்
கொத்துக் குண்டுகள் என்பது பத்து முதல் நுற்றுக்கணக்கான சிறிய குண்டுகள் ஒரு பரந்த பகுதியில் ஒரே நேரத்தில் வீசப்பட்டு தாக்குதல் நடத்தப்படும்.
வடகொரியாவின் ஏவுகணை ஆராய்ச்சி நிறுவனங்களின் தகவல் படி, ஸ்டாண்டர்ட் டைப்-2 கொத்துக் குண்டுகளால் 30 முதல் 32 ஏக்கர் பரப்பளவை அழிக்க முடியும்.
இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஹவாசோங் 11 பாலிஸ்டிக் ஏவுகணையில் கொத்துக் குண்டுகளை பொருத்தி வட கொரியா சோதனையிட்டு இருந்தது, இந்த சோதனையை அந்நாட்டின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் பார்வையிட்டு இருந்தார்.