புதிய ஏவுகணையை பரிசோதித்த வட கொரியா! ஐ.நா. விடம் கோரிக்கை விடுத்துள்ள Taliban.. உலக செய்திகள்
விமானத்தை தாக்கி அழிக்கும் புதிய ரக ஏவுகணையை நேற்று பரிசோதித்ததாக வட கொரியா கூறியுள்ளது. கடந்த ஒரு மாத காலத்துக்குள் வட கொரியா நடத்திய நான்காவது ஏவுகணை பரிசோதனை இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஏவுகணை சிறப்பாக செயல்பட்டதாகவும், அதில் புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் வட கொரியாவின் அரச ஊடகமான கே சி என் ஏ குறிப்பிட்டுள்ளது.
இந்தியா, சீனா இடையே எல்லை ஒப்பந்தம் இறுதியாகும் வரை இரு நாடுகளுக்கு இடையேயும் எல்லைப் பிரச்சினை நீடிக்கும் என இந்திய இராணுவத் தலைமைத் தளபதி தெரிவித்துள்ளார்.
ஆப்கான் மக்கள் எங்களை ஆதரிக்கின்றனர். அதனால், ஐ.நா.,வும் எங்களை அங்கீகரிக்க வேண்டும் என்று தலிபான்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் இது குறித்து முழுத்தகவல்களையும் அறிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.