தைவானுக்கு போர் விமானங்களை வழங்கிய அமெரிக்கா: வட கொரியா எச்சரிக்கை
North Korea Warns Of US For Arms Sales to Taiwan: தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கும் நடவடிக்கை பிராந்தியத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் என்று வட கொரியா எச்சரித்துள்ளது.
அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை
தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் விற்பனை செய்வதை வட கொரியா கண்டித்துள்ளது.
மேலும் இந்த நடவடிக்கை மூலம் அமெரிக்கா தைவான் ஜலசந்தியில் பதற்றத்தை ஏற்படுத்துவதுடன், நிலைத்தன்மையையும் கேள்விக்குறி ஆக்குவதாக வட கொரியா தெரிவித்துள்ளது.
சர்வதேச விவகார ஆய்வாளர் கிம் மியோங் சோல்(Kim Myong Chol) தெரிவித்த கருத்தில், தைவானுக்கு வந்து இறங்கியுள்ள அமெரிக்காவின் போர் விமானங்கள், இந்த பிராந்தியத்தின் விவகாரங்களில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டு வருவதற்கான முக்கிய உதாரணங்கள் என்று குறிப்பிட்டார்.

அத்துடன் தைவானின் பிரிவினைவாதிகளை ஆதரிப்பதாகவும், சீனாவின் “ஒரே சீனா” கொள்கையை எதிர்ப்பதாகவும் அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டியுள்ளார்.
தைவான் உடனான பிரச்சனை என்பது சீனாவின் உள்நாட்டு விவகாரம் ஆகும். இதனை எவ்வாறு முடிவுக்கு கொண்டு வருவது என்பது முழுக்க முழுக்க சீன மக்களுடன் தொடர்புடையது. இதில் தலையிட வெளிப்புற சக்திகளுக்கு இடமில்லை என்றும் ஆய்வாளர் கிம் மியோங் சோல் தெரிவித்துள்ளார்.