ஈரானுக்கு நேர்ந்தது... வட கொரியா தாமாகவே அணு ஆயுதத் தாக்குதலைத் தொடுக்க முடிவு
கிம் ஜாங்-உன் எப்போதேனும் எதிரிகளால் படுகொலை செய்யப்பட்டால், வட கொரியா தானாகவே அணு ஆயுதத் தாக்குதலைத் தொடுக்கும் என்று அந்த நாட்டின் அரசியலமைப்பு தற்போது திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
பதிலடித் தாக்குதல்கள்
ஈரானில் அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதல்கள் மூலம் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இந்தப் பயங்கரமான அரசியலமைப்பு திருத்தத்தை வட கொரியா அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டின் உயர் தலைவர் கொல்லப்பட்டாலோ அல்லது செயல்பட இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டாலோ, உடனடியாகப் பதிலடித் தாக்குதல்கள் தொடுக்கப்படும் என்று அந்தப் பதறவைக்கும் திருத்தம் குறிப்பிடுகிறது.
இந்த திருத்தமானது மார்ச் 22 அன்று உருவாக்கப்பட்டது, ஆனால் வியாழக்கிழமையன்று பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டது. வட கொரியாவின் அணுசக்தி கொள்கை சட்டத்தின் 3-வது பிரிவு தற்போது குறிப்பிடுவது:
பகை சக்திகளின் தாக்குதல்களால் அரசின் அணுசக்திப் படைகளின் மீதான கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புக்கு ஆபத்து ஏற்பட்டால்... அணு ஆயுதத் தாக்குதல் தானாகவே உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும்.
கிம் மற்றும் அவரது நெருங்கிய வட்டாரத்தினர் மீதான எந்தவொரு படுகொலை முயற்சியும், பிப்ரவரியில் ஈரானில் நடந்த அமெரிக்க-இஸ்ரேலிய நடவடிக்கையை விட மிகவும் கடினமானதாக இருக்கும்.

கடுமையானக் கட்டுப்பாடுகள்
இந்த நிலையில் தற்போது வட கொரியாவின் எல்லைகள் எல்லைகளில் கடுமையானக் கட்டுப்பாடுகள் அமுலுக்குக் கொண்டுவரப் பட்டுள்ளது. நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கப்படும் மிகச் சிலரும் எப்போதும் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுவதால், உளவுத் தகவல்களைச் சேகரிப்பது மிகவும் கடினமாகிறது.

வட கொரியா தனது தெற்கு எல்லையில் ஒரு புதிய வகை பீரங்கிப் படையை நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளது, தென் கொரியாவை தங்கள் தாக்குதல் எல்லைக்குள் கொண்டுவரும் முயற்சி என்றே கூறப்படுகிறது.
இதனிடையே, 60 கி.மீ.க்கும் அதிகமான வீச்சு கொண்டதாகக் கூறப்படும் புதிய ஒரு ஆயுதத்தின் உற்பத்தியை, கிம் வெள்ளிக்கிழமை அன்று ஆய்வு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |