பங்கேற்க மாட்டோம்! டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகிய வட கொரியா! இது தான் காரணம்
இந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க மாட்டோம் என்று வட கொரியா அறிவித்துள்ளது.
கொரோனாவிலிருந்து தனது விளையாட்டு வீரர்களைப் பாதுகாப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக வட கொரியா கூறியுள்ளது.
ஜூலை 23 ஆம் திகதி போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் இந்த அறிவிப்பின் மூலம் டோக்கியோ ஒலிம்பிக்கிலிருந்து விலகிய முதல் பெரிய நாடாக வட கொரியா உள்ளது.
டோக்கியா ஒலிம்பிக்கை போட்டியை பயனபடுத்தி வட கொரியாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடு திட்டமிட்டிருந்த தென் கொரியாவின் நம்பிக்கைக்கு இந்த முடிவு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
2018ல் இரு நாடுகளும் இணைந்து ஒரு அணியாக குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றனர், இது தொடர்ச்சியான வரலாற்று உச்சிமாநாடுகளுக்கு வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.
