பொது இடங்களில் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொள்ளும் வடகொரிய ஜனாதிபதியும் மகளும்: நாடகமாம்
வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன்னும், அவரது மகளும் பொது இடங்களில் கொஞ்சிக்கொள்ளும், முத்தமிட்டுக்கொள்ளும் புகைப்படங்கள் சமீப காலமாக அதிகம் வெளியாகிவருகின்றன.
ஆனால், அவர்களுடைய நாட்டைக் குறித்து ஆராய்ச்சி செய்யும் நிபுணர் ஒருவர், அவையெல்லாம் அப்பட்டமான நாடகம் என்கிறார்.
பொது இடங்களில் கொஞ்சிக்கொள்ளும் கிம் மகள்
2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் திடீரென ஒருநாள், தன் மகளுடன் பொது நிகழ்ச்சி ஒன்றில் தோன்றினார் வடகொரிய ஜனாதிபதியான கிம் ஜாங் உன்.
அதற்குப் பிறகு எங்கு சென்றாலும் தந்தையும் மகளும் கையைப் பிடித்துக்கொண்டே செல்ல, பொது நிகழ்ச்சிகளின்போதும் தந்தை மகளைக் கொஞ்ச, மகள் தந்தையின் மொழுமொழு கன்னத்தில் முத்தமிட, பார்ப்பவர்களெல்லாம், இந்த பயங்கர சர்வாதிகாரிக்குள் இப்படி ஒரு பாசமா என வியக்கும் அளவில் இருந்தன அவர்களுடைய நடவடிக்கைகள்.
எல்லாம் நாடகமாம்...
ஆனால், வடகொரியாவில் பொது இடங்களில் என்ன நடந்தாலும், அவையெல்லாமே நாடகம்தான், அவற்றின் பின்னால் ஏதாவது மனோரீதியான ஒரு காரணம் இருக்கத்தான் செய்யும் என்கிறார் Sung-Yoon Lee என்னும் வடகொரிய நிபுணர்.
அதாவது, இப்படி கிம்மும் அவருடைய மகளும் பொது இடங்களில் கட்டியணைத்து முத்தமிட்டுக்கொள்வதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்கிறார் Sung-Yoon Lee.
ஒன்று, இப்படி தந்தையும் மகளும் கொஞ்சிக்கொள்வதைப் பார்ப்பவர்கள், பாருங்கள் இந்த கிம் ஒரு சர்வாதிகாரி, ஆனாலும், தன் மகளை எப்படி நேசிக்கிறார், உண்மையில் அவர் ஒரு நல்ல குடும்பஸ்தராக இருக்கவேண்டும், தன் குடும்பத்தை நேசிக்கும் ஒருவர் அணு ஆயுத போரை துவக்குவாரா? ஆக, வடகொரியாவிடம் அணு ஆயுதங்கள் உள்ளன என்னும் எணத்துடனேயே நாம் வாழவேண்டியதுதான் என்னும் எண்ணத்தை மற்ற நாடுகளுக்கு உருவாக்குவது வடகொரியாவின் நோக்கம் என்கிறார் Sung-Yoon Lee.
இன்னொரு விடயம், குறிப்பாக, அமெரிக்காவுக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு ஒரு செய்தியைத் தெரியப்படுத்துவதற்காக என்று கூறும் Sung-Yoon Lee, அதாவது, நாங்கள் பரம்பரை பரம்பரையாக நாட்டை ஆள்பவர்கள், நீங்கள் அப்படியல்ல, அமெரிக்க ஜனாதிபதியாகவே இருந்தாலும், நீங்கள் ஆட்சி செய்யப்போவது ஐந்து ஆண்டுகள்தான், ஆனால், எங்களிடன் அணு ஆயுதங்கள் எப்போதும் இருக்கும், எங்கள் அதிகாரத்தையும், அணு ஆயுதங்களையும், நாங்கள் அடுத்து எங்கள் பிள்ளைகளுக்குக் கொடுப்போம், அவர்கள் அவர்களுடைய பிள்ளைகளுக்குக் கொடுப்பார்கள், இப்படி, காலம் காலமாக ஆட்சியில் நீடித்துக்கொண்டே இருப்போம் என்று அமெரிக்கர்களுக்கு சொல்வதற்காகவும்தான் இந்த கொஞ்சல், முத்த நாடகமெல்லாம் என்கிறார் Sung-Yoon Lee.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |