உக்ரைனில் கொத்தாக மடிந்த வட கொரிய வீரர்கள்: ஒப்புக்கொண்ட கிம் ஜோங் உன்
உக்ரைனில் வட கொரிய வீரர்கள் கொல்லப்படும் தகவல் அறிந்து இதயம் நொறுங்கியதாக கிம் ஜோங் உன் முதல் முறையாக தெரிவித்துள்ளார்.
இதயம் வலிக்கிறது
ரஷ்ய ஆதரவாக உக்ரைனில் களமிறங்கிய வட கொரிய வீரர்கள் பேரிழப்பை எதிர்கொண்டதை முதல் முறையாக கிம் ஜோங் உன் ஒப்புக்கொண்டுள்ளார். வியாழக்கிழமை பியோங்யாங்கில் நடந்த ஒரு விழாவில் கிம் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
உக்ரைனின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் ரஷ்யாவுக்காகப் போராடிய ஒரு பிரிவின் தளபதிகளையும் அவர் சந்தித்தார். மட்டுமின்றி, வீர செயல் புரிந்த இராணுவம் எனவும் கிம் அவர்களைப் பாராட்டியுள்ளார்.
மட்டுமின்றி, மகத்தான வெற்றிக்காகவும் பெருமைக்காகவும் தங்கள் விலைமதிப்பற்ற உயிர்களைத் தியாகம் செய்த உன்னத மனிதர்களை நினைவுச் சுவரில் உள்ள புகைப்படங்கள் மூலம் மட்டுமே நான் சந்திக்க முடிகிறது என்ற யதார்த்தத்தை எதிர்கொள்ளும்போது என் இதயம் வலிக்கிறது என்று தமது உரையில் கிம் குறிப்பிட்டுள்ளார்.
வீர மரணமடைந்த வீரர்களின் துயருற்ற குடும்பங்களுக்கு முன்னால் நான் நிற்கும்போது, நமது விலைமதிப்பற்ற மகன்களைப் பாதுகாக்க முடியாமல் போனதற்கு எனது வருத்தத்தையும் மன்னிப்பையும் எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை என்றும் கிம் குறிப்பிட்டுள்ளார்.
4,000 பேர்கள்
மட்டுமின்றி, சுவரில் மாட்டப்பட்டிருந்த வீரர்களின் புகைப்படங்களுக்கு கண்ணீர் விட்டு அழுது அஞ்சலி செலுத்திய குடும்ப உறுப்பினர்களையும் கிம் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார்.
கிம் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான உயர்மட்ட சந்திப்புகளுக்குப் பிறகு, கடந்த ஆண்டு உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை ஆதரிக்க வட கொரியா அதிக எண்ணிக்கையிலான துருப்புக்களையும் உபகரணங்களையும் அனுப்பத் தொடங்கியது.
ரஷ்யாவும் வட கொரியாவும் ஆரம்பத்தில் இதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டன, ஆனால் பின்னர் வட கொரியா படைகளின் ஈடுபாட்டைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டுள்ளன.
ரஷ்யாவில் சுமார் 12,000 வட கொரிய துருப்புக்கள் இருப்பதாக உக்ரைன் மற்றும் அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது. அதில் 4,000 பேர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காயங்களுடன் தப்பியதாக மேற்கத்திய நாடுகளின் அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |