வடகொரியாவில் Squid Game தொடரை ரகசியமாக தேடிப் பார்க்கும் மக்கள்! என்ன காரணம்?
வடகொரியாவில் இருக்கும் மக்கள் நெட்பிளிக்சில் வெளியான ஸ்க்விட் கேம் தொடரை ரகசியமாக பார்த்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல ஆன்லைன் தளமான நெட்பிளிக்ஸில், சமீபத்தில் Squid Game என்ற தொடர் வெளியானது. இந்த தொடர் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த தொடரை வடகொரியாவில் இருக்கும் மக்கள் ரகசியமாக பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏனெனில் இந்த தொடர் மரணத்தின் தொடர்புடையது.
அதே போன்று வடகொரியாவில் இருக்கும் மக்களில் பலரும், மரண பயத்துடனே வாழ்ந்து வருவதால், இந்த தொடரை காண துடிப்பதாக கூறப்படுகிறது, இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், வடகொரியாவில் மேற்கத்திய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் போன்றவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை மீறி, யாரேனும் மேற்கத்திய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள் பார்த்தால், அவர்களுக்கு மரணதண்டனையை எதிர்கொள்ள நேரிடும். இருப்பினும், வடகொரியா மக்களின் வாழ்க்கையுடன் எதிரொலிக்கும் இந்த தொடரை, அங்கிருக்கும் மக்கள் பார்க்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்த தொடர் USB பிளாஷ் டிரைவ்கள் மற்றும் SD கார்டுகள் போன்றவை மூலம் சேமிக்கப்பட்டு, அதன் பின் கப்பல்கள் மூலம் வடகொரியாவிற்குள் செல் வதாக என்று பியோங்சாங் நகரவாசி ஒருவர் கூறியுள்ளார்.
இந்த தொடரின் கதைக்களம் அவர்களின் சொந்த யதார்த்ததிற்கு இணையாக இருப்பதாக அவர்கள் கருதுகின்றனர். பணம் சம்பாதிப்பதற்காக அரசாங்கம் என்ன சொன்னாலும் செய்ய வேண்டும், இல்லையென்றால், எந்த நேரத்திலும் அவர்கள் தூக்கில் இடப்படலாம்.
அதே போன்று தான் இந்த தொடரிலும் சற்று வித்தியாசமாக காட்டுகின்றனர். ஆனால் இந்த தொடர் அவர்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பது போன்று உள்ளது. இதனால், இந்த தொடரை அவர்கள் அங்கிருக்கும் portable media players வசதியுடன் பார்த்து வருவதாக தகவல்கள் கூறுகின்றனர்.
இந்த தொடரை கடந்த அக்டோபர் மாதம் வடகொரியா அரசு ஊடகம் கடுமையாக கண்டித்திருந்தது. அதில் ஒரு தீவிர போட்டியால் மனிதகுலம் அழிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.