வடக்கு மாசிடோனியா இரவு விடுதி பயங்கர விபத்து: 50க்கும் மேற்பட்டோர் பலி! பலர் படுகாயம்
வடக்கு மாசிடோனியாவில் இரவு விடுதியில் நடந்த விபத்தில் குறைந்தது 50 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
வடக்கு மாசிடோனியா இரவு விடுதி தீ விபத்து
வடக்கு மாசிடோனியாவின் கோகனி(Kocani) நகரில் உள்ள பிரபலமான பல்ஸ் இரவு விடுதியில்(Club Pulse) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேலும், நூற்றுக்கணக்கானோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Tragic disaster in North Macedonia — dozens of young people burned alive in a nightclub fire
— NEXTA (@nexta_tv) March 16, 2025
A fire broke out at a nightclub in the city of Kočani. At least 50 people have died, most likely very young.
The tragedy was caused by pyrotechnics — someone in the crowd set off… pic.twitter.com/LAVulBEUy3
உள்ளூர் நேரப்படி அதிகாலை 3 மணியளவில் நடந்த இந்த துயர சம்பவத்தில், இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1,500-க்கும் மேற்பட்டோர் தீயிலிருந்து தப்பிக்க முயன்றபோது நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர்.
இந்த விபத்தின் கோரத்தினால் உள்ளூர் அவசர கால சேவைகள் ஸ்தம்பித்து போயுள்ளன.
நகரத்தின் ஒரே மருத்துவமனையானது காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை சமாளிக்க முடியாமல் தவித்து வருகிறது.
கோகனி நகரத்தின் வரலாற்றில் கரும்புள்ளி
சுமார் 25,000 மக்கள் தொகை கொண்ட கோகனி நகரத்தின் வரலாற்றில் இதுவே மிக மோசமான பேரழிவு என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் வானொலி நிலையம் வெளியிட்ட அறிக்கையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் தெரியவில்லை, ஆனால் உயிரிழப்புகள் 20 முதல் 100 வரை இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளது.
பிரதமர் ஹிரிஸ்டியன் மிக்கோஸ்கி இந்த துயர சம்பவத்தை தொடர்ந்து கோகனிக்கு விரைந்துள்ளார். தீ விபத்துக்கான காரணங்கள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |