தீவிரமடைந்த வடகிழக்கு பருவமழையால் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு மழை தரும் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் பல இடங்களில் கனமழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் இன்று காலையில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யக்கூடும்.
எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும்போது குடை எடுத்து செல்லவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |