நேர்காணலில் பெண்ணிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்வி! இழப்பீடு வழங்கிய நிறுவனம்
வயது குறித்த கேள்வியால் அயர்லாந்து பெண்ணுக்கு இழப்பீடு
நேர்காணலில் வயது மற்றும் பாலினம் ரீதியில் தெரிவாகாததால் ஜெனிஸ் வால்ஷ்க்கு வடக்கு அயர்லாந்தின் சமத்துவ ஆணையம் ஆதரவு தெரிவித்தது
வடக்கு அயர்லாந்தில் நேர்காணலுக்கு வந்த பெண்ணிடம் வயது குறித்த கேள்வியால் இழப்பீடு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த ஜெனிஸ் வால்ஷ் என்ற பெண், பீஸா நிறுவனம் ஒன்றுக்கு ஓட்டுநர் பணிக்கான நேர்காணலுக்கு சென்றுள்ளார்.
அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளின் இடையே, அவரது வயது மற்றும் பாலினம் குறித்த கேள்விகள் இடம்பெற்றிருந்தன. கேள்விகளுக்கு பதில் அளித்துவிட்டு வந்த ஜெனிஸ் வால்ஷ் பணிக்கு தெரிவாகவில்லை.
இந்த நிலையில், நேர்காணலின் தொடக்கத்திலேயே தனது வயது மற்றும் பாலினம் கேள்விகள் கேட்டு, அதனால் தான் நிராகரிக்கப்பட்டுவிட்டதாக ஜெனிஸ் உணர்ந்துள்ளார்.
பின்னர் சமூக வலைத்தளம் வழியாக தகவல் அனுப்பிய ஜெனிஸ், அதில் வயது அடிப்படையில் தனக்கு பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக உணர்வதாக கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து குறித்த நிறுவனத்தின் நேர்காணல் குழுவினர்களில் ஒருவர் ஜெனிஸிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
மேலும், குறித்த நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளரான ஜஸ்டின் குயிர்க் 4,250 பவுண்ட்களை ஜெனிஸிற்கு இழப்பீடாக வழங்குவதாக தெரிவித்துள்ளார்.