இத்தாலியில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ளம்: 3 பேர் உயிரிழப்பு, ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்
இத்தாலியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக வடக்கு எமிலியா-ரோமக்னா பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேர் வரை உயிரிழந்து இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலியில் வெள்ளப்பெருக்கு
இத்தாலியின் வடக்கு எமிலியா-ரோமக்னா(northern Emilia-Romagna) பிராந்தியத்தில் பெய்து வரும் தொடர் மழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 3 பேர் வரை உயிரிழந்து இருக்கும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களது இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர் என புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Severe floods are widespread across Italy's Emilia Romagna region after heavy rains, with rescue operations underwayhttps://t.co/8xyWy2d9Fw pic.twitter.com/H5EQH9UBHj
— Sky News (@SkyNews) May 17, 2023
மேலும் மழை பொழிவு இன்னும் நிறைவடையவில்லை என்றும், இன்னும் சில மணி நேரங்களுக்கு கனமழை தொடரும் என்பதால் அழிவுகள் தீவிரமடையலாம் என்று அந்த நாட்டின் சிவில் பாதுகாப்பு எஜென்சியின் துணைத் தலைவர் டிட்டி போஸ்டிக்லியோன் SkyTG24 தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
3 பேர் உயிரிழப்பு
இந்நிலையில் எமிலியா-ரோமக்னா பகுதி அதிகாரிகள், போர்லி, செசெனா மற்றும் செசெனாட்டிகோ ஆகிய நகரங்களில் இருந்து மூன்று உயிரிழந்த உடல்களை கண்டறிந்துள்ளனர், மேலும் 3 பேர் வரை காணாமல் போகி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Reuters
கனமழை காரணமாக கிட்டத்தட்ட 14 ஆறுகளின் கரைகளை உடைத்து இருப்பதால், செசெனா(Cesena) ஆகிய நகரங்களில் வீட்டு மாடிகளில் தஞ்சமடைந்துள்ள பொதுமக்களை தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் மீட்டு வருகின்றனர்.
அத்துடன் ஆறுகளுக்கு அல்லது நீர்நிலைக்கு அருகில் உள்ள மக்கள் அந்த பகுதிக்கு செல்லாமல் தவிர்க்க வேண்டும் என்று பிராந்திய தலைவர் ஸ்டெபானோ பொனாசினி முகநூல் பக்கம் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மோசமான வெள்ளப்பெருக்கில் வடக்கு நகரமான ரவென்னா மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது, இந்த நகரம் அட்ரியாடிக் கடற்கரைக்கு அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Reuters
பல்வேறு நகரங்களில் சாலைகள் மற்றும் ரயில் போக்குவரத்துகள் தடைப்பட்டு இருப்பதால், ஆபத்தான பகுதிகளில் சிக்கியுள்ள மக்களை பத்திரமாக மீட்பதில் சிரமம் எழுந்துள்ளது.
AFP