அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் நாடுகளின் ராணுவப் பயிற்சி.., எச்சரிக்கை விடுத்த வட கொரியா
அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் ராணுவப் பயிற்சிகளுக்கு வட கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது
வட கொரியத் தலைவரின் சகோதரி எச்சரிக்கை
அமெரிக்க கூட்டுப் பயிற்சிகளுக்கு எதிராக வட கொரியத் தலைவரின் சகோதரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வட கொரியாவின் அணு மற்றும் ஏவுகணை அச்சுறுத்தல்களுக்கு எதிராக தென் கொரியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்தவிருக்கின்றன.
இது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு பொறுப்பற்ற வலிமையைக் காட்டும் என்று வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் நேற்று கண்டனம் தெரிவித்ததாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென் கொரியாவின் ஜெஜு தீவில் இன்று தொடங்கி ஐந்து நாட்கள் வரை கடற்படை, வான் மற்றும் ஏவுகணை-பாதுகாப்புப் பயிற்சிகளை நடத்த உள்ளன.
அதனுடன் அமெரிக்க மற்றும் தென் கொரிய இராணுவத்தை ஒருங்கிணைக்கும் தனித்தனி டேபிள்டாப் பயிற்சியும் நடத்தப்பட உள்ளது.
அதாவது செப்டம்பர் 15 ஆம் திகதி தொடங்கி "ஃFreedom Edge" எனப்படும் வருடாந்திர தற்காப்புப் பயிற்சிகளை நடத்தும் என்று தென் கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ராணுவ பயிற்சியானது எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார் வட கொரியத் தலைவரின் சகோதரி.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |