வடகொரியாவில் குழந்தைகள் கூட ஹாலிவுட் படம் பார்க்கக் கூடாது! மீறினால் என்ன தண்டனை தெரியுமா?
வடகொரியாவில் மேற்கத்தியக் கலாச்சாரம் வளரக்கூடாது என்பதற்காக இனி குழந்தைகள் கூட ஹாலிவுட் படம் பார்க்கக் கூடாது என அந்நாட்டு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
சர்வாதிகார ஆட்சி
உலகின் சர்வாதிகார ஆட்சி நடைபெறும் நாடுகளில் ஒன்றாக வடகொரியா பார்க்கப்படுகிறது. அந்த நாட்டில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதைக் கூட மக்கள் தீர்மானிக்க முடியாது.
இணைய வசதி கூட ராணுவ அதிகாரிகளுக்கும், அரசு அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.
குறிப்பாக உள்நாட்டில் நடைபெறும் எந்த ஒரு தகவலும் வெளிநாட்டவர்களுக்குத் தெரிந்து விடக்கூடாது என்பதில் அந்நாட்டு அரசு தெளிவாக இருக்கிறது.
சோசியலிச சித்தாந்தம் கொண்ட சீனா போன்ற நாடுகளிடம் மட்டுமே அவை பெரிதும் தொடர்பு வைத்துக் கொள்கிறது.
ஹாலிவுட் படத்திற்குத் தடை
மேற்கத்தியக் கலாச்சாரம் அந்நாட்டவர்களுக்கு வந்து விடக்கூடாது என்பதற்காகப் பல வழிகளில் அதற்கான தடையை விதித்துள்ளனர்.
குறிப்பாக இணையம் மூலம் வெளிநாட்டு கலாச்சாரம் வந்து விடக்கூடாது என்பதற்காக அதற்கு நிறையத் தடைகளை விதித்துள்ளனர்.
@stock image
அது மட்டுமில்லாமல் வட கொரிய மக்கள் மேற்கத்திய திரைப்படத்துக்களை பார்க்கக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது. எளிமையான கலாச்சார மாற்றத்திற்கு சினிமா பெரிய பங்கு வகிக்கிறது என அவர்கள் நம்புகிறார்கள்.
5 ஆண்டு சிறை
வட கொரிய மக்கள் கள்ளச் சந்தையில் கேசட்டுகளை வாங்கி வந்து குடும்பத்தோடு ஹாலிவுட் சினிமா பார்க்கிறார்கள்.ஆனால் அதற்கும் வட கொரியா இப்போது கடுமையான தடை விதித்துள்ளது.
@KCNA VIA KNS / STR
குழந்தைகள் ஹாலிவுட் படங்களைப் பார்க்கக் கூடாது என்றும் அவ்வாறு பார்த்தால் 5 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
மேலும் படம் பார்த்த குழந்தையின் பெற்றோர் 6 மாதம் முகாமில் இருக்க வேண்டி வரும் எனக் கூறியுள்ளது. இதனை கண்காணிக்க வட கொரிய அரசு சிறப்புக் குழுக்களைக் கூட நியமித்துக் கண்காணிக்கிறதாம்.