நார்வே செஸ்; உலக சாம்பியனை முதல் முறையாக வீழ்த்திய தமிழக வீராங்கனை வைஷாலி
தமிழக வீராங்கனை வைஷாலி முதல்முறையாக உலக சாம்பியன் ஜூ வென்ஜூனை வீழ்த்தியுள்ளார்.
நார்வே செஸ் 2025
நார்வே நாட்டின், ஸ்டாவஞ்சரில் கடந்த மே 26 ஆம் திகதி தொடங்கி ஜூன் 6 ஆம் திகதி வரை வருடாந்திர செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில், பெண்களுக்கான 6வது சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் வைஷாலி ரமேஷ்பாபுவும், உலக சாம்பியனான, சீனாவை சேர்ந்த ஜூ வென்ஜூனும் மோதினர்.
பரபரப்பான இந்த ஆட்டத்தில், வைஷாலி முதல்முறையாக 5 முறை உலக சாம்பியனான ஜூ வென்ஜூனை தோற்கடித்துள்ளார்.
VAISHALI beats JU WENJUN! 🔥
— Norway Chess (@NorwayChess) June 3, 2025
This is her first-ever victory over the Women’s World Champion!! 👏👏
She did it in the Armageddon.#NorwayChess ♟️ pic.twitter.com/sc7gT4heEy
இதன் மூலம் 3 புள்ளிகள் பெற்ற வைஷாலி, 9.5 புள்ளிகள் பெற்று, 6 பேர் கொண்ட பட்டியலில் 5வது இடத்தில் உள்ளார். இந்தியாவை சேர்ந்த ஹம்பி கோனேரு, 13.5 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறார்.

2024 நார்வே செஸ் போட்டியில் வைஷாலியின் சகோதரர் பிரக்யானந்தா, உலக சாம்பியனான நார்வேவின் மேக்னஸ் கார்ல்சனை முதல்முறையாக தோற்கடித்தார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |