ரஷ்ய தாக்குதல் குறித்து பீதியை வெளிப்படுத்தாதீர்கள்! உக்ரைன் ஜனாதிபதி வலியுறுத்தல்
ரஷ்ய இராணுவத் தாக்குதல் குறித்து பீதியை வெளிப்படுத்தாமல் ஒற்றுமையாக இருக்குமாறு எம்.பி-க்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelenskiy வலியுறுத்தியுள்ளார்.
உக்ரைனுக்கு எல்லைக்கு அருகே ரஷ்ய அதன் படைகளை குவித்துள்ளதால் இரு நாடுகளுக்கு இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
உக்ரைன் மீது படையெடுத்தால் ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும் என மேற்கத்திய நாடுகள் எச்சரித்துள்ளன.
அதுமட்டுமின்றி, அமெரிக்க, பிரித்தானியா நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கியுள்ளன.
இந்நிலையில் உக்ரைன் பாராளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி Volodymyr Zelenskiy, உக்ரைன் தனது ஆயுதப் படைகளின் எண்ணிக்கையை மூன்று ஆண்டுகளில் 1,00,000 வரை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், உக்ரைனின் பொருளாதாரம் நிலையடைந்து வருவதாகவும் கூறினார்.
அதுமட்டுமின்றி, ரஷ்ய இராணுவத் தாக்குதலின் அச்சுறுத்தல் குறித்து பீதியை வெளிப்படுத்தாமல், ஒற்றுமையக இருக்குமாறு எம்.பி-க்களை வலியுறுத்தினார்.
ரஷ்யா, பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் மற்றொரு சுற்று அமைதிப் பேச்சுவார்த்தைக்கான திகதி விரைவில் ஒப்புக்கொள்ளப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.