3 நாட்களுக்கு இதை தவிர்க்க வேண்டும்... இலங்கை மக்களிடம் எரிசக்தி அமைச்சர் முக்கிய கோரிக்கை
அடுத்த மூன்று நாட்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என இலங்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கையில் கடும் எரிபொருள் தட்டுப்பாடு நிலவி வருவதால் மக்கள் எரிபொருள் நிரப்ப நிலையங்களில் நீண்ட வரிசையில் பல மணிநேரம் காத்துக்கிடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
எரிபொருள் இல்லாததால் கொழும்பு மற்றும் அதன் புறநகரில் உள்ள பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் இன்று மூடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ் போக்குவரத்து சேவை திங்கட்கிழமை (16) மட்டுப்படுத்தப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேசமயம், மருந்து, எரிபொருள், எரிவாயு மற்றும் காய்கறிகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கும் சிறப்பு செயதிட்டம் இன்று (16) முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தில் கிரிக்கெட் போட்டி! வைரலாகும் காணொளி
இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு எரிபொருள் நிலையங்களில் வரிசையில் நிற்க வேண்டாம் என இலங்கை எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று டீசல் சரக்குக்கப்பல் வந்தடைந்த நிலையில், அடுத்த 2 வாரங்களில் 3 கப்பல்கள் இந்தியக் கடன் வரிசையில் இலங்கை வரவிருப்பதால், போதுமான எரிபொருள் கிடைக்கும்.
1190 எரிபொருள் நிலையங்களில் விநியோகம் முடியும் வரை, அடுத்த 3 நாட்களுக்கு வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறேன் என கஞ்சன விஜேசேகர பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.