இதை தவிர்க்க வேண்டும்! கொரோனா தொடர்பில் உலக நாடுகளுக்கு WHO விடுத்துள்ள எச்சரிக்கை
சர்வதேச பயணங்களை மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது இல்லை என உலக நாடுகளுக்கு WHO ஐரோப்பிய தலைவர் Hans Kluge எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தனது வாராந்திர செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட உரையாற்றிய Hans Kluge, இப்போது நிலவும் புதிய மாறுபாட்டின் தொடர் அச்சுறுத்தலால் நாம் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
சர்வதேச பயணத்தை மீண்டும் தொடங்குவது குறித்த முடிவை உலக நாடுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் அல்லது தவிர்க்க வேண்டும். ஐரோப்பா கண்டத்தில் அதிகரிக்கும் மாறுபாடு விரைவாக பரவக்கூடும்.
தீவிரமாக பரவக்கூடியதாக கருத்தப்படும் இந்திய மாறுபாடு, ஐரோப்பா பிராந்தியத்தில் உள்ள 53 நாடுகளில் குறைந்தது 26 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஆனால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் புதிய மாறுபாட்டுக்கு எதிராக பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார். இதுவரை தோன்றிய புதிய கொரோனா மாறுபாடுகள் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளுக்கு கட்டுப்படுகின்றன.
அனைத்து கொரோனா வகைகளும் இப்போது வரை பயன்படுத்தப்படும் அதே பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.
இதுவரை ஐரோப்பாயில் 23 சதவிகித மக்கள் மட்டுமே முதல் டோஸை போட்டுள்ளனர், வெறும் 11 சதவிகிதத்தினர் மட்டுமே இரண்டு டோஸ் தடுப்பூசிகளை போட்டுள்ளனர்.
மக்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தடுப்பூசிகள் தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்கும் ஒரு கருவியாக இருக்கலாம், ஆனால் அதனால் நாம் கண்மூடித்தனமாக இருக்க முடியாது என்று Hans Kluge கூறினார்.