இனி வெளிநாடுகளுக்கு பலகாரம், உடைகள் கொண்டு செல்வதில் சிக்கல்: இது தான் காரணமா?
பண்டிகை காலம் நெருங்கும் நேரத்தில் சென்னை விமான நிலையத்தில் இருந்து பலகாரம் மற்றும் உடைகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல சுங்கத்துறை தடை விதித்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
பலகாரம் கொண்டு செல்ல தடை
தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்கு சென்ற தமிழர்களும், புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்ற தமிழர்களும் தங்களுடைய பலகாரங்களை இன்னும் மறக்காமல் இருக்கின்றனர்.
குறிப்பாக, தமிழகத்தில் இருந்து தங்களது நாட்டுக்கு வருபவர்களிடம் அவர்கள் கூறுவது என்னவென்றால், பலகாரங்களை மறக்காமல் கொண்டு வாருங்கள் என்பது தான்.
அதுவும், தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் மக்களின் உடைகளின் எடையை விட, அவர்கள் கொண்டு செல்லும் பலகாரங்களின் எடைகள் தான் அதிகமாக இருக்கும்.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு பலகாரங்களை எடுத்து செல்வதற்கு சுங்கத்துறை தடை விதித்துள்ளது. இதனால், பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
காரணம் என்ன?
பாதுகாப்பு மற்றும் சுகாதாரச் சீர்கேட்டைத் தவிர்ப்பது போன்ற காரணங்களுக்காக இனிப்பு பலகாரங்களை கொண்டு செல்ல அதிகாரிகள் தடை விதிப்பதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இலங்கைக்கு செல்லும் விமானங்களிலும் லுங்கி, வேட்டி மற்றும் சேலை ஆகியவற்றை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக பயணிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இது போன்ற தடைகளை உடனடியாக நீக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |