ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு மின் நிலையத்தின் நிலைமை குறித்து உக்ரைன் வெளியிட்ட முக்கிய தகவல்
உக்ரைனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையத்தின் நிலைமை குறித்து உக்ரைன் அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
உக்ரைன் மீது தொடர்ந்து 9வது நாளாக போர் தொடுத்து வரும் ரஷ்ய படைகள், தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை உக்ரைனின் தெற்கில் உள்ள Zaporizhzhia அணு மின் நிலையம் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தியத்தை தொடர்ந்து, நிலையத்தில் உள்ள கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
இதனிடையே 5 மணியளிவில் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இருப்பினும், இப்போது எனர்கோடரில் உள்ள அணு மின் நிலையம் ரஷ்ய ராணுவப் படைகளால் கைப்பற்றப்பட்டதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பில் அணுசக்தி ஒழுங்குமுறைக்கான மாநில ஆய்வாளர் வெளியிட்ட அறிக்கையில், இறப்பு மற்றும் காயங்கள் பற்றிய தகவல்கள் தெளிவாக தெரியவில்லை.
அணு மின் நிலையத்தின் பாதுகாப்பிற்கு முக்கியமான அமைப்புகள் மற்றும் கூறுகள் செயல்படும் நிலையில் உள்ளன.
தற்போதைய நேரத்தில் கதிர்வீச்சு நிலையில் மாற்றங்கள் பதிவு செய்யப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
Zaporizhzhia அணு மின் நிலையமானது, ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய அணு மின் நிலையம் ஆகும்.